நிதி அமைச்சகம்

தேசியக் கட்டமைப்பு வசதிக்கான ஆன்லைன் தகவல் பலகை ஒன்றை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தினார்

Posted On: 10 AUG 2020 5:12PM by PIB Chennai

தேசியக் கட்டமைப்பு வசதிக்கான இணையவழி தகவல் பலகை ஒன்றை (National Infrastructure Pipeline – NIP online Dashboard) இன்று காணொளி மாநாடு மூலமாக மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.

 

புதிய இந்தியாவில் தேசியக் கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையிலான இணையவழி தகவல் பலகையாக இது இருக்கும். இந்தியா இன்வெஸ்ட்மென்ட் கிரிட் (India Investment Grid -IIG) இணையதளத்தில் (www.indiainvestmentgrid.gov.in) இந்தத் தகவல் பலகை செயல்படும். நாட்டில் முதலீடு செய்யக்கூடிய திட்டங்களுக்கான வாய்ப்புகள் குறித்த திட்ட விவரங்களும் சமீபத்திய திட்ட விவரங்களும் வெளியிடப்படும். இணையதளத்தை ஐஐஜி பராமரிக்கிறது. இந்த துவக்க நிகழ்ச்சியில் ட்டமைப்புக்கான உயர்நிலைப் பணிக்குழு உறுப்பினர்களும், பல்வேறு அமைச்சகங்களின் செயலர்களும், மத்திய அரசு துறை செயலர்களும் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய திருமதி. நிர்மலா சீதாராமன், “சுயசார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு தேசியக் கட்டமைப்பு வசதி அமைப்பு (National Infrastructure Pipeline) ஊக்கமளிக்கும். பல்வேறு என் ஐ பி திட்டங்கள் பற்றிய தகவல்களை எளிதில் அறிந்து கொள்ளவும், பிபிபி திட்டங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் உதவும். என்ஐபியை செயல்படுத்தும் இலக்கை நோக்கிய மிகப்பெரிய அடியெடுத்து வைப்பதாக இது அமையும். நாட்டில் தற்போது கட்டமைப்பு மேம்பாட்டில் நிலவும் இடைவெளியைக் குறைக்க இது உதவும் என்று கூறினார்.

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001BJL8.jpg

 

உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகள் குறித்து பல தகவல்களையும் அறிந்து கொள்வதற்கான கலந்துரையாடக் கூடிய இணையதளமாக ஐஐஜி. இந்தியா இன்வெஸ்ட்மென்ட் கிரிட் (www.indiainvestmentgrid.gov.in),செயல்படும்.

ஐஜி மூலமாக முதலீட்டாளர்கள் பின்வருவனவற்றை செய்யலாம்:

பல்வேறு துறைகளிலும் இந்தியா முழுவதிலும் உள்ள முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து இத்தகவல் பலகையில் தேடி, தெரிந்து கொள்ளலாம்

 

தாங்கள் விரும்புகின்ற திட்டங்கள் பற்றிய முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து அறிந்துகொள்ளலாம். அவை பற்றி ஆர்வம் தெரிவிக்கலாம். திட்டத்தை மேற்கொண்டுள்ள பிரமோட்டர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

 

2019-2020 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றுகையில், அடுத்த ஐந்தாண்டுகளில் கட்டமைப்புத் திட்டங்களுக்காக 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி, சுதந்திர தின உரையாற்றுகையில் நவீனக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதோடு, வாழ்க்கைத் தரமும் உயரும் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து உயர்நிலைக்குழு என்ஐபி இடம் இறுதி அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின்படி 2020- 25ஆம் நிதியாண்டு காலங்களில் 111 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலதனம் பெற மதிப்பிடப்பட்டிருந்தது..

 

நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதியை அளிப்பது, அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, ஆகியவற்றுக்கான முதன் முறையான புதிய முயற்சி என் ஐ பியாகும். திட்டத் தயாரிப்பை மேம்படுத்துவது,  கட்டமைப்புத் திட்டங்களில் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, ஆகியவற்றுக்கு என் ஐபி உதவும்.2025ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு என் பி மிகவும் முக்கியம். பொருளாதார, சமூக கட்டமைப்பு திட்டங்கள் இரண்டுமே என் ஐ பி இல் இடம்பெறும். இது கட்டமைப்பு பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட மாஸ்டர் பட்டியலின் அடிப்படையில் அமையும்.

 

எதிர்பார்க்கப்பட்ட மொத்த மூலதன செலவினமான 111 லட்சம் கோடி ரூபாயில் 44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான (40 சதவிகிதம்) திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 33 லட்சம் கோடி ரூபாய் (30 சதவீதம்) மதிப்பிலான திட்டங்கள் கருத்துருவாக்க கட்டத்தில் உள்ளன.22 லட்சம் கோடி ரூபாய் (20 சதவீதம்) மதிப்பிலான திட்டங்கள், திட்ட மேம்பாட்டு நிலையில் உள்ளன. (திட்டம் அடையாளம் காணப்பட்டு டிபிஆர் (DPR) தயார் செய்யப்பட்டு விட்டது. ஆனால் நிதி இனிதான் பெறப்படவேண்டும்). எஞ்சிய 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான (10 சதவிகிதம்) திட்டங்கள் வகைப்படுத்தப் படவில்லை. அனைத்துத் திட்டங்களும் ஐஜி இல் வெளியிடப்படும் இதனால் என்ஐபி பரவலாக அறியப்படும். உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை ஈர்க்கும்.

 

என்ஐபி பணிக்குழுவின் இறுதி அறிக்கையின் மூன்றாம் தொகுதியில் என்ஐபி திட்டங்கள் பற்றிய தரவுகள் உள்ளன. இவை ஐஜி-யில் கிடைக்கும். அனைத்துத் திட்டங்கள் பற்றிய சமீபத்திய செய்திகளும் தகவல்களும் இடம்பெறும். கட்டமைப்பு பிரிவில் பல்வேறு பிரிவுகளில் முதலீட்டை ஈர்க்கும் வகையில், இவை பயனுள்ளதாக இருக்கும்.

 

அனைத்துத் துறைகளும், அமைச்சகங்களும் உடனடியாக தத்தமது துறை /அமைச்சகம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் பற்றிய சமீபத்திய தகவல்களை உடனடியாக என்பி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். திட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பதிவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் அமைச்சகங்களையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

****



(Release ID: 1644900) Visitor Counter : 321