அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நீடித்த மற்றும் திறனுடன் ஹைட்ரஜனை வெளியிடக் கூடிய நீடித்துத் திறனுடன் செயல்படும் குறைந்த செலவிலான வினையூக்கிகளை பெங்களூரில் உள்ள ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்
Posted On:
10 AUG 2020 12:40PM by PIB Chennai
புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாட்டை படிப்படியாக நீக்கும் வகையிலும் பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் வகையிலும் அடுத்த தலைமுறைக்கான குறைந்த கார்பன் கொண்ட எரிபொருளாக ஹைட்ரஜன் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒரு எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதன் எதிர்காலம் என்பது நீரை மின்வேதியியல் வினை மூலம் பிளந்து ஹைட்ரஜனை உருவாக்கக் கூடிய மின்வினையூக்கிகளின் மேம்பட்ட வடிவமைப்பில் தான் இருக்கிறது.
ஹைட்ரஜனை வெளியிடும் வேதிவினைக்கான மின்வினையூக்கியின் திறன் என்பது அதனுடைய நீடித்து இருக்கும் தன்மை (தாங்கி நிற்கும் தன்மை), மின்வேதி வினையின் அளவுக்கதிகமான ஆற்றலை அதிகபட்சம் குறைக்கக்கூடிய தன்மை மற்றும் சேர்க்கை வினைக்கான (உற்பத்தி) செலவு ஆகியவற்றைப் பெருமளவில் சார்ந்து இருக்கும். வர்த்தகரீதியாகப் பயன்படுத்தப்படும் பிளாட்டினம் / கார்பன் வினையூக்கிகள் திறனுடையவையாக இருந்தாலும் அவை செலவு மிக்கவை மற்றும் நீண்ட நேரம் அவற்றைப் பயன்படுத்தும் போது கனிம அயனி வெளியேறுதல் அல்லது மின்வினையூக்கி அரிப்புக்கு ஆளாதல் ஆகியன ஏற்படுகின்றன.
கனிம ஆர்கானிக் சட்டக சேர்மங்கள் (MOFs) மற்றும் ஒருங்கிணைக்கும் பாலிமர்கள் (COPs) ஆகியன அடுத்த தலைமுறைக்கான வினையூக்கிகளாகப் பார்க்கப்படுகின்றன. அதிக மேற்பரப்பு, குறைவான மின்னாற்றல் பரிமாற்றத் தடை மற்றும் நீரைப் பிளப்பதற்கான திறனை அதிகரிக்கக் கூடிய அதிக அளவிலான செயல்தன்மை ஆகியவற்றைப் பெறும் வகையில் இந்த வினையூக்கிகளை மாற்றிக் கொள்ளமுடியும். விஞ்ஞானிகள் மின்வினையூக்கி அரிப்பைத் தடுப்பதற்காக கனிம ஆர்கானிக் சட்டக சேர்மப் பொருள்கள் அடிப்படையிலான வினையூக்கிகளை சீரமைக்கும் ஒரு புதிய அணுகுமுறையை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் நானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் அறிவியலுக்கான மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்லாடியம் Pd(II) அயனிகளைக் கொண்ட ஒரு புதிய ஒருங்கிணைப்புப் பாலிமரை உருவாக்கி உள்ளனர். ஹைட்ரஜனை கிரகிக்கக்கூடிய செயலூக்கமான பரப்புகளைக் கொண்டவையாகவும் சிறப்பாக ஆற்றல் பரிமாற்றத்தை மேற்கொள்ளக் கூடிய பென்சீன் டெட்ராமைன் (BTA) அயனியாக்க மூலக்கூறுகளைக் கொண்டவையாகவும் இவை உள்ளன. இவை இரண்டும் இணைந்து ஹெச்-இணைப்பு உள்உறவுகள் மூலமாக Pd(BTA)இன் இரு பரிமாணத் தகடுகளை உருவாக்குகின்றன. இந்த ஆராய்ச்சியானது ”ஏசிஎஸ் அப்பளைடு எனர்ஜி மெட்டீரியல்ஸ்” என்ற அறிவியல் ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
(Release ID: 1644839)
Visitor Counter : 242