மத்திய பணியாளர் தேர்வாணையம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பேரா.பிரதீப் ஜோஷி, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2020 8:25PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் (டாக்டர்) பிரதீப் குமார் ஜோஷி, மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு)  டாக்டர் ஜிதேந்திர சிங்கை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து உரையாடினார்.

     பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகப்  பொறுப்பேற்ற பின்னர், மத்திய அமைச்சரை, திரு ஜோஷி சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

     மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங், பேராசிரியர் ஜோஷிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

----


(வெளியீட்டு அடையாள எண்: 1644778) வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi