கலாசாரத்துறை அமைச்சகம்

அபானிந்திரநாத் தாகூரின் 150 -வது பிறந்த ஆண்டினை நினைவு கூறும் வகையில் 2020 ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய நவீன கலை அரங்கம் " மாபெரும் மேதை அபானிந்திரநாத் தாகூர் "என்ற பெயரில் நிகர் நிலை பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 06 AUG 2020 6:44PM by PIB Chennai

அபானிந்திரநாத் தாகூரின் 150 -வது பிறந்த ஆண்டினை நினைவு கூறும் வகையில் 2020 ஆகஸ்ட் 7-ம் தேதி புது தில்லியில் உள்ள தேசிய நவீன கலை அரங்கம் " மாபெரும் மேதை அபானிந்திரநாத் தாகூர் "என்ற பெயரில் நிகர் நிலை பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மிகவும் பிரசித்தி வாய்ந்த இந்தக் கலைஞரின் பெருமை மிகு படைப்புகளில் 77 கலைப் படைப்புகளைப் பெற்றுள்ள தேசிய நவீன கலை அரங்கம் அது குறித்து பெருமை கொள்கிறது. அபானிந்திரநாத் தாகூரின் பிரபலமானவற்றில் தன் வசமுள்ள 77 படைப்புகளைக் காட்சிப்படுத்தும் இந்த நிகர்நிலைக் காட்சி, அவற்றை கருத்து அடிப்படையில் நான்கு பிரிவுகளாகத் தொகுத்துள்ளது. i) இலக்கியப் பாத்திரங்களின் படங்கள் (ii) உணர்வுப் பூர்வ பாரம்பர்யம் , (iii) தனித்துவத் திறன் படைப்புகள் (iv) உட்பகுதி இயற்கை காட்சி என்பன இந்தத் தொகுப்புகளாகும்.

ஜீவன்ஸ்மிருதி என்ற தொன்மை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியும், இந்த மாமேதையின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய வினாடி வினா நிகழ்ச்சியும் இந்த நிகர்நிலைக் காட்சியில் இடம் பெற்றுள்ளன. தேசிய நவீன கலை அரங்கத்தின் ஆதரவில் தொடங்கப்பட்டுள்ள முதலாவது பண்பாட்டு ஊடக  மேடையின் உரையாடல் நிகழ்ச்சியிலும் பார்வையாளர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். இதற்குப் பார்க்க வேண்டிய வலைதளம்.
https://so-ham.in/the-great-maestro-abanindranath-tagore

******

(Release ID: 1644727) Visitor Counter : 228