பாதுகாப்பு அமைச்சகம்

லடாக் பிராந்தியத்தின் எல்லையில் உள்ள முன்னணி தளங்களுக்கு விமானப்படைத் துணைத் தளபதி பயணம்

प्रविष्टि तिथि: 07 AUG 2020 9:28PM by PIB Chennai

விமானப் படையின் மேற்கத்தியப் படைப்பிரிவின் கீழ், லடாக் பிராந்தியத்தின் எல்லைப் பகுதியில் உள்ள முன்னணி விமானப்படைத் தளங்களுக்கு விமானப் படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் ஹர்ஜித் சிங் அரோரா PVSM AVSM ADC ஆகஸ்ட் 7, 2020-இல் பயணம் மேற்கொண்டார்.

  • விமானத் தளங்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ததோடு, இந்த இடங்களில் செயல்பட்டு வரும் போர்ப்படைப் பிரிவுகளில் உள்ள விமானப் படை வீரர்களுடனும் விமானப் படை துணைத் தளபதி கலந்துரையாடினார். இந்தப் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்திய விமானப் படைப் பிரிவுகளின் தயார்நிலை குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. முற்றிலும் நேர்மையுடன் தங்களது பணிகளை தொடர்ந்து செய்யுமாறும், அனைத்து நேரங்களிலும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு மிகுந்த விழிப்புடன் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் விமானப்படை விமானிகள், பாதுகாப்புப்படையினர் மற்றும் விமானப்படை பணியாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பயணத்தின் போது, சினூக் மற்றும் இலகுரக ஹெலிகாப்டரில் அவர் பயணம் மேற்கொண்டார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/Photo(1)RCW0.jpeg

***


(रिलीज़ आईडी: 1644645) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , हिन्दी , Manipuri , Punjabi