குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி கிராமத் தொழில் ஆணையம் அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் பட்டு உற்பத்திப் பயிற்சி மற்றும் உற்பத்தி மையத்துடன் காதி சுற்றுலாவை இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Posted On: 09 AUG 2020 6:27PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தொலைதூரப் பழங்குடி கிராமமான சுல்லுவின் (Chullyu) சுழல் மற்றும் நெசவு நடவடிக்கைகள் விரைவில், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்துடன்   (KVIC) இணைந்து மாநிலத்தில் பட்டுக்கான முதல் வகையான பயிற்சி மற்றும் உற்பத்தி மையத்தைத் திறக்க உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மையம் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தைப் புதுப்பித்து பயிற்சி மற்றும் உற்பத்தி மையமாக மாற்றியுள்ளது. பள்ளிக் கட்டிடம் காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையத்திற்கு (KVIC) அருணாச்சலப் பிரதேச அரசின் கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/oldschoolbuildingROJP.jpg

கைத்தறி, சர்கா, சில்க் ரீலிங் மெஷின்கள் மற்றும் வார்பிங் டிரம்ஸ் போன்ற இயந்திரங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இயந்திரங்களை நிறுவுவது முழு வீச்சில் நடைபெறுகிறது. பயிற்சியைத் தொடங்க சுல்லு (Chullyu) கிராமத்தைச் சேர்ந்த 25 உள்ளூர் கைவினைஞர்களின் முதல் பிரிவு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

\https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/newbuilding32CR.jpg

 

Ziro சுற்றுலா இடத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுடன் இந்த மையத்தை இணைப்பதையும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் உள்ளூர் கைவினைஞர்களுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்கு உறுதியான சந்தையை வழங்குகிறது. சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்வதை பொறுத்து உற்பத்தி மையத்திற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படும் . ஆரம்ப காலத்திற்கு, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC)  மூலப்பொருள், பயிற்சி, ஊதியங்களுக்கான செலவு, புதிய வடிவமைப்புகளின் முன்மாதிரிகளை உருவாக்குவதற்கான செலவு ஆகியவற்றை வழங்கும்.

*****



(Release ID: 1644633) Visitor Counter : 177