புவி அறிவியல் அமைச்சகம்

அடுத்த 24 மணி நேரத்தில் கேரளா, மாஹே ஆகிய பகுதிகளில் தனிப்பட்ட சில பகுதிகளில் கனத்த மழையும், சில பகுதிகளில் வெகு கனத்த மழையும் ஆங்காங்கே சில பகுதிகளில் கனமழையும் தொடர்ந்து பெய்யும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே தனிப்பட்ட சில பகுதிகளில் வெகு கனத்த மழையும், சில பகுதிகளில் மிகக் கனத்த மழையும் பெய்யும்.


கர்நாடகத்தின் தெற்கு உள் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு ஆங்காங்கே பலத்த மழை முதல் வெகு கனத்த மழை பெய்யலாம். தமிழ்நாட்டின் கணவாய்ப் பகுதிகளிலும், கர்நாடகத்தின் தெற்குஉள் பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மிகமிக கனத்த மழை பெய்யும்.

9 ஆகஸ்ட் முதல் வடமேற்கு இந்தியாவில் மழை அதிகரிக்கும். மேற்கு இமாலயப் பகுதிகளிலும், அதையொட்டியுள்ள சமவெளிப் பகுதிகளிலும், ஆங்காங்கே கனமழை, மிக கனமழை பெய்யலாம்.

Posted On: 08 AUG 2020 3:34PM by PIB Chennai

இந்திய வானியல் ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் /மண்டல வானியல் ஆய்வு மையம், புதுதில்லி கூறியுள்ளதாவது:

8.8.2020 ன்படி முக்கிய வானிலை அம்சங்கள்:

♦️நன்கு உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு முகமாக நகர்ந்து, தற்போது வடமேற்கிலும் அதை அடுத்துள்ள அரபிக்கடலின் வடகிழக்குப் பகுதியிலும் நிலைகொண்டுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் மழை குறைந்துள்ளது.

♦️பருவமழை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சாதாரண நிலைக்கருகே உள்ளது தொடர்ந்து சுழற்சியில் உள்ளது.

♦️அரபிக்கடல் பகுதியிலும், மேற்குக் கடலோரத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் தென்படும் வலுவான தென்மேற்கு/ மேற்குப் பருவமழை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டலத்தின் கீழ் நிலைகளில் காணப்படும்.

 

இதனால் ஏற்படும் விளைவுகள்:

 

  1. அடுத்த 24 மணி நேரத்துக்கு கேரளாவிலும், மாஹேவிலும் பரவலானது முதல் கனத்தமழையும், தனிப்பட்ட சில பகுதிகளில் மிக மிக கனத்த மழையும் பொழியும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிகமிக கனத்த மழை வரை ஆங்காங்கே பொழியும்.

 

  1. கர்நாடகாவின் தெற்கு உள் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே பலத்த மழை முதல் மிகபலத்த மழை அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கணவாய்ப் பகுதிகளிலும், கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளிலும் தெற்கு உள் பகுதிகளிலும் மிகமிக கனமழை பெய்யக்கூடும்

♦️ வடமேற்கு இந்தியாவில் 9 ஆகஸ்ட் முதல் மழை அதிகரிக்கும். மேற்கு இமாலய மண்டலப் பகுதிகளிலும் அதை ட்டியுள்ள சமவெளிகளிலும் 9 முதல் 11 ஆகஸ்ட் வரை ஆங்காங்கே சில இடங்களில் மிக கனத்த மழை முதல் மிக மிக கனத்த மழை வரை பெய்யக்கூடும்.

♦️ வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் அதையொட்டியுள்ள மேற்கு மத்திய பகுதிகளிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை 9 ஆகஸ்ட் 2020 அன்று உருவாக வாய்ப்பு உள்ளது.

 

இதன் காரணமாக மத்திய இந்தியாவின் கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும். 9 முதல் 11 ஆகஸ்ட் வரை டிசாவில்கனத்த மழை முதல் மிக மிக கனமழை வரை பெய்யும்.விதர்பா, சட்டிஸ்கர் பகுதிகளில் 10 ஆகஸ்ட் 2020 முதல் 12 ஆகஸ்ட் 2020 வரை பலத்த மழை முதல் மிக மிக பலத்த மழை பெய்யும். ஆகஸ்ட் 2020 அன்று தனிப்பட்ட சில பகுதிகளில் ஒடிசாவில் மிகமிக அதிக மழை பெய்யும்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001SU05.jpg

 

FORECAST:

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002174M.jpg https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image003OJS0.jpg

***




 

முகநூல், டுவிட்டர், வாட்சப், ஜிமெயில், லிங்க்ட்இன் பகிரவும்.



(Release ID: 1644425) Visitor Counter : 168