பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மலைவாழ் மக்களின் வாழ்வில் நிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் TRIFED அமைப்பு உத்தரவாதம் - 33வது நிறுவன நாளில் உறுதி

Posted On: 07 AUG 2020 4:14PM by PIB Chennai

மலைவாழ் மக்களின் வாழ்வில் நிலைமாற்றத்தை ஏற்படுத்தித் தரும் உறுதியை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று இந்திய மலைவாழ் மக்கள் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு சம்மேளனம் (டிரைபெட் - TRIFED) கூறியுள்ளது. 2020 ஆகஸ்ட் 6 ஆம் தேதி அந்த அமைப்பின் 33வது நிறுவன நாளை ஒட்டி இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தொழில் நிறுவனச் செயல்பாடு மற்றும் வணிகச் செயல்பாடுகள் மூலம் மலைவாழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தனது லட்சியப் பாதையில் இந்த அமைப்பு உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சவாலான இந்தக் காலக்கட்டத்தில், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்பு உருவாக்குதலில் டிரைபெட் அமைப்பு தன் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.

நாடு முழுக்க நோய்த் தொற்று பரவிவரும் நிலையில், எல்லா துறைகளும் ஆன்லைனில் செல்லும் நிலையில், டிரைபெட் தனது நிறுவன நாளை 2020 ஆகஸ்ட் 6 ஆம் தேதி மெய்நிகர் நிகழ்ச்சியாக நடத்தியது. டிரைபெட் மெய்நிகர் அலுவலகத் தொடர்பில் 81 ஆன்லைன் பணி நிலையங்கள் உள்ளன. அது தவிர கூடுதலாக 100 மாநில மற்றும் முகமைப் பணி நிலையங்கள் மூலம் நாடு முழுக்க டிரைபெட் அலுவலர்கள் தங்கள் பங்காளர்களுடன் பணியாற்றி வருகின்றன. முன்னோடி ஏஜென்சிகள் அல்லது அமலாக்க ஏஜென்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து திட்டங்களை லட்சிய நோக்குடன் செயல்படுத்தி, மலைவாழ் மக்களை மற்ற மக்களுடன் இணைந்த வாழ்க்கை நிலைக்கு கொண்டு வருவதற்கு இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது. தொழிலாளர் பங்கேற்பு நிலையை மதிப்பிட்டு, அவர்களின் முயற்சிகளை முறைப்படுத்துவதற்கு, அலுவலர் பங்கேற்பு மற்றும் பணிப் பகிர்வு மேட்ரிக்ஸ் முறை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற டிஜிட்டல் மென்பொருள்களின் உதவியுடன் மாநிலங்கள் மற்றும் பிராந்திய அளவில் தடையின்றி பணிகள் நடைபெறுகின்றன. மலைவாழ் மக்களின் வணிகத்தை மேம்படுத்துதல் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்துதலுக்கு டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு சார்ந்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கிராமம் சார்ந்த மலைவாழ் உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன், சர்வதேசத் தரத்திலான மின்னணு வணிகத் தளங்கள் மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதில் அடங்கும்



(Release ID: 1644132) Visitor Counter : 496