நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் உணவு பாதுகாப்பு திட்டம்; கட்டம் -1

Posted On: 06 AUG 2020 7:36PM by PIB Chennai

உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் இயங்கும் இந்திய உணவுக் கழகம் மார்ச் 24 முதல் ஜூன் 30 2020 வரையிலான கால கட்டத்தில் மொத்தம் சுமார் 139 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஏறத்தாழ 5,000 அடுக்குகளைப் பயன்படுத்தியும்    மற்றும் கிட்டத்தட்ட 14.7 லட்சம் மெட்ரிக் டன் 91,874 சுமை வாகனங்களிலும்  நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவை வழங்குவதை உறுதி செய்வதற்காக உணவு தானியங்கள் கப்பல்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. ரயில்வே மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை போன்ற பிற அமைச்சகங்களின் ஆதரவை அதிகமாக பெறுவதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியாதால், உணவு தானியங்களை கொண்டு செல்லும் பணிகள் சீராகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றன. இந்திய உணவுக் கழகம், மத்திய கிடங்கு கழகம், மத்திய ரயில்வே கிடங்கு கழகம் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் குடிமை பொருள் விநியோகத் துறைகள் / மாநகராட்சி ஆகியவற்றின் பணியாளர்கள் அனைவரும் சரியான ஒருங்கிணைப்புடன் பணியாற்றியதால் இவை அனைத்தும் சாத்தியமாயிற்று.

பயனாளிகளுக்கு உணவு தானியங்களை விநியோகிப்பதற்காக, நாடு முழுவதும் சுமார் 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் ஒட்டுமொத்த இணைப்பு (நெட்வொர்க்) பயன்படுத்தப்பட்டது, அங்கு கோவிட்-19 நோய்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டன. சமூக விலகல், முகக்கவசங்களைப் பயன்படுத்துதல், கைகளை சுத்திகரிக்கும் கிருமி நாசினிகள், கை சுகாதாரத்தைப் பராமரிக்க சோப்பு மற்றும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது, விநியோக நேரம்,  ஈபோஸ் சாதனங்களை அடிக்கடி சுத்திகரித்தல் போன்றவை ஒவ்வொரு மாநிலத்திலும் / யூனியன் பிரதேசத்திலும் பின்பற்றப்பட்டன. இவை தவிர பயனாளிகளுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்கான புதுமையான நடைமுறைகளைப் பயன்படுத்தியதோடு, சமூக விலகலை எல்லா நேரங்களிலும் உறுதிசெய்தது.

 

மேலும், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்.கள் இணைந்து ஏப்ரல்-ஜூன் 2020 காலகட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 111.52 லட்சம் மெட்ரிக் டன் (93.5%) அளவுக்கும் அதிகமான உணவு தானியங்களை விநியோகித்திருப்பது பின்வரும் விவரங்களில் இருந்து தெரியவருகிறது:

 

  1. 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  ஒவ்வொரு மாதத்திலும் சுமார் 75 கோடிப் பயனாளிகளுக்கு 37.5 லட்சம் மெட்ரிக் டன் (94%).
  2. ஜூன் மாதத்தில் சுமார் 73 கோடிப் பயனாளிகளுக்கு 36.54 லட்சம் மெட்ரிக் டன் (92%)

 

**** *


(Release ID: 1644059) Visitor Counter : 223