ஜல்சக்தி அமைச்சகம்

இந்திய நீர்வளங்கள் தகவல் முறைமையின் புதிய வெர்சனை ஜல சக்தி அமைச்சகம் தொடங்கியது

Posted On: 06 AUG 2020 4:32PM by PIB Chennai

இந்திய நீர்வளங்கள் முறைமையின் (India-WRIS)  புதிய பதிப்பை மத்திய ஜல சக்தி அமைச்சகம் தொடங்கியது. இதில் புதிய செயல்பாட்டு வசதிகளும், அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் இதை அணுகலாம். www.indiawris.gov.in என்ற இணையதளத்தில் இதைக் காணலாம். நீர்வளம் தொடர்பான தகவல்கள் இதன் முதன்மைப் பக்க அறிவிப்பில் இடம் பெற்றிருக்கும். மழைப் பொழிவு, ஆறுகளில் நீர் அளவு மற்றும் திறந்துவிடப் பட்டுள்ள நீரின் அளவு, நீர் நிலைகள் பற்றிய தகவல்கள், நிலத்தடி நீர் வளம், நீர்த்தேக்கங்கள், ஆவியாதல் நிலை, மண்ணின் ஈரத்தன்மை குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கும். நீர் வள திட்டங்கள், நீர்நிலைகள், நீர் - வானிலை தகவல்களும் இதில் இருக்கும். GIS லேயர் எடிட்டிங் செய்யத் தேவையான அம்சங்களும் இதில் இருக்கும்.

வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான தேவையாக தண்ணீர் இருக்கிறது. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை பெருகும்நிலையில், நகரமயமாக்கல் மற்றும் அது தொடர்பான வளர்ச்சிகள் அதிகரிக்கும்போது, இயற்கை வளங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. எந்தவொரு வளத்தையும் பயன்படுத்துதல் குறித்து நல்ல திட்டமிடல் செய்வதற்கு, வலுவான அடிப்படைத் தகவல்களும், நம்பகமான தகவல் முறைமையும் தேவைப்படுகிறது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு, தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் 2019 ஜூலை மாதம் இந்திய நீர்வளங்கள் தகவல் முறைமையின் முதலாவது வெர்சனை மத்திய ஜல சக்தி அமைச்சகம் தொடங்கியது. அப்போதிருந்து இதில் புதிய செயல்பாட்டு வசதிகளும், அம்சங்களும் சேர்க்கப்பட்டு வந்தன.

****



(Release ID: 1643979) Visitor Counter : 250