சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அமைச்சர்களுடன் டாக்டர் ஹர்ஷவர்தன் கலந்துரையாடல்
Posted On:
06 AUG 2020 3:37PM by PIB Chennai
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய மண்டல இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் நடத்திய அந்த மண்டலத்தின் சுகாதார அமைச்சர்களுடனான மெய்நிகர் கலந்துரையாடல் கூட்டத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டார். கோவிட்-19 தொற்று பரவி வரும் சூழலில் , அத்தியாவசிய சுகாதாரச் சேவைகள் மற்றும் பொது சுகாதாரத் திட்டங்களைப் பராமரிப்பது இக்கூட்டத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கூட்டத்தின் தொடக்கத்தில், திரு. ரோட்ரிகோ ஆப்ரின் ( டிபிள்யூ எச் ஓ), கோவிட்-19 சூழலில் , உலக சுகாதார அமைப்பு அளித்து வரும் இடப்பெயர்வு ஆதரவு பற்றி அமைச்சர்களிடம் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் தடுப்பு மருந்து உருவாக்கம் மற்றும் கொள்கை ஒதுக்கீடு திட்டம் பற்றி திரு. சுனில் பாகல் ( டிபிள்யூ எச் ஓ) விளக்கினார்.
கோவிட்-19 உடன் இந்தியா சந்தித்து வரும் சூழல் குறித்து டாக்டர் ஹர்ஷவர்தன் உரையாற்றினார்.’’ ஜனவரி 7-ஆம்தேதி சீனா உலக சுகாதார அமைப்பிடம் தொற்று பற்றி தெரிவித்தவுடன் இந்தியா அதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டது ‘’ என்று அவர் தெரிவித்தார். ஏவியன் காய்ச்சல், எச்1என்1 காய்ச்சல், சிகா, நிபா வைரசுகள் போன்ற தொற்றுகள் முன்பு பரவிய போது, மேற்கொள்ளப்பட்ட கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை உத்திகளை அரசு முழுமையாக கடைப்பிடித்தது என்று அவர் விளக்கினார். “மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிக மக்கள் தொகை, குறைந்த ஜிடிபி ஒதுக்கீடு, தனிநபர் மருத்துவர் விகிதம், படுக்கை விகிதம் குறைவு ஆகியவற்றுக்கு இடையிலும், இந்தியாவின் தீவிர மற்றும் படிப்படியான பல மட்ட நிறுவன மீட்பு நடவடிக்கைகளால், கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. 10 லட்சம் என்ற எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகப் பராமரிக்கப்படுகிறது’’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.
செயல்திறன் மிக்கப் பொதுமுடக்கம் மூலம், எவ்வாறு தொற்றுப் பரவல் விகிதம் குறைக்கப்பட்டது என்பதை விளக்கிய டாக்டர். ஹர்ஷவர்தன், இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் பரிசோதனை வசதிகளை அரசு மேம்படுத்தியதாகத் தெரிவித்தார். “ஜனவரியில் ஒரு ஆய்வகம் என்ற நிலையிலிருந்து, இன்று 1370 ஆய்வகங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. மூன்று மணி நேர பயண தூரத்தில், ஆய்வகங்களைத் தற்போது அணுகலாம். தினசரி, பத்து லட்சம் பேருக்கு 140 பேரைச் சோதிக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக் காட்டிலும், 36 மாநிலங்களில், 33 மாநிலங்களில் அதிகமாக பரிசோதனை நடத்தப்படுகிறது’’ என்றார் அவர். கட்டுப்பாட்டு உத்திகள் காரணமாக மூன்று மாநிலங்களில், பாதிப்பை 50 சதவீதமாகவும், ஏழு மாநிலங்களில் 32 சதவீதமாகவும் குறைக்க முடிந்துள்ளதாக அவர் கூறினார். தொற்றுப் பரவல் இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
1000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 100 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை 10 நாட்கள் என்ற சாதனை காலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கட்டியுள்ளதாக அவர் கூறினார். மேலும், தேசிய அளவில் பயிற்சி; மாநில , மாவட்ட அளவில் வசதிகளுக்கான பயிற்சி புதுதில்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையால் அளிக்கப்படும் வலைதள அடிப்படையிலான வெனடிலேட்டர் மேலாண்மைப் பயிற்சி, நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தயார்நிலை குறித்த ஒத்திகை, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தொலைதூர மருத்துவ வசதி ஆகிய பிற நடவடிக்கைகள் , இறப்பு விகிதத்தைக் குறைக்க பெருமளவில் உதவியுள்ளது. 3.33 % ( ஜூன் 18) ஆக இருந்த இறப்பு விகிதம், 2.11 % ( ஆகஸ்ட் 3) ஆக குறைந்ததற்கு அதிக கவனம் செலுத்திய தலையீடுகளே காரணமாகும்.
******
(Release ID: 1643969)
Visitor Counter : 273