பாதுகாப்பு அமைச்சகம்

தெற்குக் கடற்படை மூலம் அவசர மருத்துவ சிகிச்சை

Posted On: 06 AUG 2020 11:57AM by PIB Chennai

ஆகஸ்ட் 05 அன்று தெற்குக் கடற்படை (SNC) கொச்சியில் இருந்த ஒரு வணிகக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி அவசர மருத்துவ சிகிச்சை மேற்கொண்டது. ஆகஸ்ட் 05, 2020 அன்று சுமார் 10.30 மணியளவில், அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த ராஜ்பால் சிங் சந்துவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து தெற்குக் கடற்படைக்கு (SNC) ஒரு தகவல் கிடைத்தது. இவர் பூர்வீக வணிகக் கப்பலின் கேப்டன் எம்.வி.விஸ்வ பிரேமா ஆவார். கேப்டன் காலில் பலத்த காயம் அடைந்ததாகவும், அதனால் அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக கொச்சிக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறுகிய அறிவிப்பில் விபத்து வெளியேற்றத்திற்கான (CASEVAC) வழியில், இந்தியக் கடற்படைக் கப்பல் கருடாவிலிருந்து ஒரு Sea king ஹெலிகாப்டர் ஏவப்பட்டது. ஹெலிகாப்டரின் விமானிகள் மிகுந்த திறமையையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியதால், மோசமான கடல் நிலை சாதகமற்ற சூழ்நிலைகளால் எழுந்த சவால்களை வெற்றிகரமாக வென்று நோயாளியினைப் பாதுகாப்பா வெளியேறுவதை உறுதி செய்தனர்.

விபத்திற்குள்ளான கேப்டன், இந்தியக் கடற்படைக் கப்பல் (INS) கருடாவிற்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக, அவர் கொச்சியின் மருத்துவ அறக்கட்டளை மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.

******



(Release ID: 1643751) Visitor Counter : 169