பாதுகாப்பு அமைச்சகம்
கொரோனா போராளிகளுக்காக கிழக்கு கடற்படை இசைக்குழு நேரடி நிகழ்ச்சியை அரங்கேற்றியது
Posted On:
06 AUG 2020 11:58AM by PIB Chennai
74 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கிழக்குக் கடற்படை, கொரோனா போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடற்படைக் குழுவின் நேரடி நிகழ்ச்சியை ஆகஸ்ட், 05, 2020 அன்று விசாகப்பட்டினத்தின் சங்கரத்தில் உள்ள போஜ்ஜனா கோண்டா என்ற பாரம்பரிய தளத்தில் ஏற்பாடு செய்தது. ஆந்திராவின் கடற்படை அலுவலர் கமடோர் சஞ்சீவ் இசார், தலைமை விருந்தினரான அனகபள்ளி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். பீசெட்டி வெங்கட சத்தியவதி மற்றும் நிகழ்விற்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மதிப்புமிக்க கொரோனா போராளிகளையும் வரவேற்றார்.
ஒரு மணி நேர நிகழ்ச்சியில் மார்ஷியல், ஆங்கில பாப் இசை முதல் சில ஆத்மார்தமான தேசபக்திப் பாடல்கள் வரை பலவிதமான இசை உற்சாகத்துடன் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான மற்றும் எப்போதும் பசுமையான நினைவுகளை தரக்கூடிய பாடல்களான ‘சுனோ கர் சே துனியா வலோன்’ மற்றும் ‘அய் மேரே வாட்டன் கே லோகன்’ ஆகிய பாடல்களும் இசைக்கப்பட்டன, மேலும் முத்தரப்பு சேவைப் பாடல்களின் விளக்கக்காட்சி இந்த நிகழ்விற்கு பொருத்தமான முடிவை வழங்கியது. தூர்தர்ஷன் சப்தகிரி மற்றும் தூர்தர்ஷன் யாத்கிரி ஆகியவற்றில் இசைக்குழு நடத்திய நிகழ்ச்சியை தூர்தர்ஷன் ஹைதராபாத் நேரடியாக ஒளிபரப்பியது.
நாட்டின் கொரோனா பரவலைத் தடுக்க, தங்கள் உயிருக்கு ஆபத்து காத்திருக்கும் நேரத்திலும் இன்னுயிரையும் பொருட்படுத்தாது, உறுதியுடன் போராடி வரும் கொரோனா வீரர்களுக்கு தேசத்தின் நன்றியுணர்வையும், பாராட்டையும் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள இராணுவக் குழுக்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கள் நிகழ்ச்சிகளை ஆகஸ்ட் 01 முதல் முதன்முறையாக நாடு முழுவதும் காணுமாறு கொண்டாடி வருகின்றன.
******
(Release ID: 1643744)
Visitor Counter : 238