கலாசாரத்துறை அமைச்சகம்

கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சிசிஆர்டி) சுதந்திரதின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான தேசபக்திக் நாட்டுப்பற்று போட்டியை நடத்துகிறது

Posted On: 05 AUG 2020 2:13PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் சுதந்திர தினத்தை முன்னிட்டு Mygov.in என்ற இணைய தளத்துடன் இணைந்து தேசிய அளவிலான நாட்டுப்பற்று கவிதைப் போட்டியை நடத்துகின்றது.

தேசிய அளவிலான இந்த கவிதைப் போட்டியில் 10 முதல் 14 வயதுப் பிரிவில் உள்ள திறமை வாய்ந்த சிறுவர்கள் ”நாட்டுப்பற்று கவிதைகளை” எழுதி அனுப்பி போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இந்திய அரசியல் அமைப்பு மற்றும் அதன் 8வது அட்டவணை அங்கீகரித்துள்ள ஆங்கிலம் உள்ளிட்ட எந்தவொரு பிராந்திய மொழியிலும் சிறுவர்கள் தங்களின் சொந்த கவிதையை எழுதி அனுப்பலாம்.  ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் இருந்தும் அதிகபட்சம் 5 சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை தேசியத் தேர்வுக் குழுவால் மதிப்பீடு செய்யப்படும்.  சுதந்திரத் தினத்தன்று பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.  01-07-2007 முதல் 30-06-2011க்குள் (இரண்டு நாட்களும் உட்பட) பிறந்த சிறுவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவர்.

சிசிஆர்டி-யானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியை கலாச்சாரத்தோடு இணைக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகிறது.  10-14 வயது பிரிவில் உள்ள தகுதி வாய்ந்த சிறுவர்களுக்கு இதுவரையில் 14,000க்கும் அதிகமான உதவித் தொகைகள் வழங்கப்பட்டு உள்ளன.

கவிதைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தகுதிச் சான்றிதழும் கீழ்வரும் வகையிலான ரொக்கப் பரிசும் வழங்கப்படும்:

1. முதல் பரிசு (ரூ. 15,000/-)

2. இரண்டாம் பரிசு (ரூ. 7,500/-)

3. மூன்றாம் பரிசு (ரூ. 5,000/-)

4. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசங்களுக்கும் ஆறுதல் பரிசு (ரூ. 2000/-) (எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் இருந்து கவிதைகள் பெறப்பட்டனவோ அந்தப் பகுதிகளுக்கு மட்டும்)

போட்டிக்கு கவிதைகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07-08-2020 இரவு 11:30 மணி.

போட்டியின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும் : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/term%20&%20condition.pdf

பெயரை பதிவு செய்யவும் கூடுதலான விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்த இணைப்பை கிளிக் செய்யவும். :

https://www.mygov.in/task/national-level-patriotic-poem-competition/

 

******



(Release ID: 1643524) Visitor Counter : 212