விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூட்டுறவு தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக சேனலை (cooptube) தொடங்கினார்.
Posted On:
04 AUG 2020 7:20PM by PIB Chennai
மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின், Cooptube என்ற தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழக சேனலைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. நரேந்திர சிங் தோமர், பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த சுயசார்பு பாரத அழைப்பின் பல்வேறு அம்சங்களை செயல்படுத்துவதில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் முன்னணியில் உள்ளது என்றார். பிரதமரின் கனவுகளை நனவாக்குவதில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நாட்டில் முக்கிய பங்கு உண்டு. இந்தி மற்றும் பதினெட்டு வெவ்வேறு மாநிலங்களுக்கான பிராந்திய மொழிகளில் ‘கூட்டுறவு உருவாக்கம் மற்றும் பதிவு செய்தல்’ குறித்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தயாரித்த வழிகாட்டுதல் வீடியோக்களையும் திரு. தோமர் வெளியிட்டார்.
மத்திய அரசு விவசாயத்திற்கு உதவுவதற்காக சுயசார்பு பாரதத்தின் கீழ் தொடர்ச்சியான உருமாறும் நடவடிக்கைகள் மற்றும் துறை சார்ந்த நிதித் தொகுப்புகளை சமீபத்தில் அறிவித்ததாக திரு. தோமர் கூறினார். இந்த முயற்சிகள் இந்தியா உலகின் உணவுத் தொழிற்சாலையாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் ”ஒரே தேசம் ஒரே சந்தை” என்பதை நோக்கி நகர உதவும். விவசாய சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளின் வரம்பு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உள்ள அனைத்து நடவடிக்கைகள் மற்றும் சேவைகளில் வேளாண் உள்கட்டமைப்பு, சிறு, குறு உணவு நிறுவனங்கள், மதிப்புச் சங்கிலிகள், மீன்வள மற்றும் கால்நடை வளர்ப்பு, மருத்துவ மற்றும் மூலிகைத் தாவரங்கள், தேனீ வளர்ப்பு, பசுமை இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்துதல். மேலும் விவசாயத்திற்கு உகந்த சூழலை உருவாக்க குறிப்பிடத்தக்க சட்டத் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
*********
(Release ID: 1643384)
Visitor Counter : 1095