பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வரைவுக் கொள்கை 2020-ஐ வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சகம்.
Posted On:
03 AUG 2020 6:16PM by PIB Chennai
பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், தற்சார்பு இந்தியா தொகுப்பில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில், உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவை இடம் பெறச் செய்ய, இத்தகைய வரைமுறையை அமல்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2020-இன் (Draft Defence Production and Export Promotion Policy 2020 -DPEPP 2020) வரைவை வகுத்துள்ளது. தற்சார்பு மற்றும் ஏற்றுமதிக்கான நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் திறனுக்கு, கவனத்துடன், கட்டமைக்கப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த உந்துதலை வழங்குவதற்கான வழிகாட்டு ஆவணமாக டிபிஇபிபி 2020 திகழ்கிறது.
பின்வரும் இலக்குகள் மற்றும் நோக்கங்களுடன் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது;
1. 2025-ஆம் ஆண்டுக்குள் விமானத்துறை, பாதுகாப்பு பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில், ரூ.35,000 கோடி ( 5 பில்லியன் அமெரிக்க டாலர்) ஏற்றுமதி உள்பட ரூ.1,75,000 கோடி ( 25 பில்லியன் அமெரிக்க டாலர்) விற்றுமுதல் இலக்கை எட்டுதல்.
2. ஆயுதப் படையினரின் தேவையை தரமான பொருள்களுடன் ஈடுகட்டும் வகையில், விமானத் தொழில், கப்பல் கட்டும் தொழில் உள்பட, மாறும் தன்மையுடைய, வலுவான, போட்டித்திறன் கொண்ட பாதுகாப்புத் தொழிலை உருவாக்குதல்.
3. உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டின் மூலம் “மேக் இன் இந்தியா’’ முன்முயற்சிகளை மேற்கொள்வதன் வாயிலாக, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.
4. பாதுகாப்பு உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதியை மேம்படுத்தி, உலகப் பாதுகாப்பு மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாறுதல்.
5. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதி வழங்குதல், இந்திய ஐபி உரிமையை உருவாக்குதல், வலுவான, தற்சார்புப் பாதுகாப்பு தொழிலை மேம்படுத்துதலுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குதல்.
பின்வரும் அம்சங்களில் கவனம் செலுத்துவதற்கான பல்வேறு உத்திகளை கொள்கை கொண்டுள்ளது;
1. கொள்முதல் சீர்திருத்தங்கள்
2. உள்நாட்டு தயாரிப்பு, குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள்/ ஸ்டார்ட் அப் –களுக்கு ஆதரவு
3. வள ஆதாரங்கள் ஒதுக்கீடு
4. முதலீட்டு மேம்பாடு, அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct
Investment – FDI) எளிதாகத் தொழில் நடத்துதல்
5. புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி, மேம்பாடு
6. பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் (DEFENCE PUBLIC
SECTOR UNDERTAKINGS - DPSUs), துப்பாக்கித் தொழிற்சாலைக் குழு
(Ordnance Factory Board – OFB).
7. தர உறுதி, சோதனை உள்கட்டமைப்பு
8. ஏற்றுமதி மேம்பாடு
பொதுமக்கள் ஆலோசனை, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகள், யோசனைகளுக்கு வரைவு டிபிஇபிபி 2020 –ஐ https://ddpmod.gov.in/dpepp and https://www.makeinindiadefence.gov.in/admin/webroot/writereaddata/upload/recentactivity/Draft_DPEPP_03.08.2020.pdf –ஐ அணுகலாம். பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகம் கொள்கையை வெளியிடும்.
வரைவு டிபிஇபிபி 2020 தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் dirpnc-ddp[at]nic[dot]in.என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
(Release ID: 1643213)
Visitor Counter : 348