சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வெபினார் தொடரின் கீழ் ”குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற தனது 44வது வெபினாரை நடத்தியது.

Posted On: 03 AUG 2020 3:05PM by PIB Chennai

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் “நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற இணையத் தொடர் நிகழ்ச்சியில் 1 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்ற “குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற நிகழ்ச்சியானது பழங்காலத் தொல்பொருளியல் இடங்கள் முதல் மத்தியக்கால பெருமைமிகு நினைவுச் சின்னங்கள் மற்றும் நவீன கட்டிடக்கலையின் அற்புதங்கள் வரை குஜராத் மாநிலத்தின் ஆச்சரியமூட்டும் பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரியம் எடுத்துக்காட்டப்பட்டது.

குஜராத்தின் பாரம்பரிய சுற்றுலா சங்கத்தின் செயலாளர் திரு. ரஞ்சித் சிங் பார்மர் மற்றும் எழுத்தாளரும், பயணக் கட்டுரையாளரும், உணவு விமர்சகருமான திரு. அனில் முல்சந்தானி ஆகியோர் வழங்கிய இந்த வெபினாரானது, அழகான கோட்டைகள், அரண்மனைகள், அடுக்குமனைகள், பாரம்பரிய ஹோட்டல்கள் அல்லது தங்கும் இடங்களாக ஆக்கப்பட்ட ஹோம்ஸ்டே போன்ற இதர வரலாற்று இடங்கள் போன்ற குஜராத்தின் பல்வகையான சுற்றுலா மேம்பாட்டு இடங்களை எடுத்துக்காட்டியது. சுமார் 1600 கிமீ குஜராத் கடற்கரையைக் கொண்ட இந்திய மேற்குக் கடற்கரையானது பழங்காலம் முதல் வர்த்தகர்கள், பயணிகள், குடிபெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆகியோரை எப்படி ஈர்த்தது என்பதை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் விளக்கிக் காட்டினர்.  மேலும் குஜராத்தின் காட்சிப் புலனாகும் மற்றும் புலனாகாத பாரம்பியம் மற்றும் பாரம்பரிய ஹோட்டல்கள், ஹோம்ஸ்டே, அருங்காட்சியகங்கள், வாழ்க்கை முறை நிகழ்வு இடங்கள் மற்றும் மாநில அரசு அனுமதிக்கும் திரைப்பட ஷுட்டிங் இடங்கள் ஆகியவற்றை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.  நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வெபினார் தொடர் நிகழ்ச்சியானது ஒரே இந்தியா உன்னத இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமையான பன்முகத்தன்மையைத் மெய்நிகர்வழி எடுத்துக்காட்டும் முயற்சி ஆகும்.

 

இந்த வெபினார் குஜராத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை மெய்நிகர் காட்சிகளாகக் காட்டியது.  ராஜஸ்தான் மாநில எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு குஜராத்தின் கட்டிடக்கலைத் தொடர்களில் ஆரம்பித்து அழகான ஆழ்கிணறுகள், ஏரிகள், அறுவடை அமைப்புகள், ராணியின் படிக்கிணறு (ராணி கி வாவ்), பதன், கும்பரியா ஜெயின் கோவில் எனப் பல இடங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.  ராணி கி வாவ் என்பது 11ஆம் நூற்றாண்டின் படிக்கிணறு ஆகும்.  இதனை யுனெஸ்கோ உலகப்பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது.

கூடுதல் தலைமை இயக்குநரான ரூபிந்தர் பிரார், வெபினார் சுருக்கத்தைத் தொகுத்து வழங்கிய போது, பாரம்பரியம்மிக்க மாநிலத்தின் பலவகைப்பட்ட கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் சமையல்கலை ஆகியவற்றை பயணித்து அனுபவிக்க வேண்டிய தேவை குறித்து வலியுறுத்திப் பேசினார்.

 

வெப்பினார்களின் தொடர்களை https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

http://tourism.gov.in/dekho-apna-desh-webinar-ministry-tourism

https://www.incredibleindia.org/content/incredible-india-v2/en/events/dekho-apna-desh.html என்ற இணைப்புகளில் பார்க்கலாம்.

1857இன் நினைவுகள் – சுதந்திரப் போராட்டத்துக்கான முன்னோட்டம்” என்ற தலைப்பிலான அடுத்த வெபினார்; 8 ஆகஸ்ட் 2020 அன்று முற்பகல் 11:00 மணிக்கு நடைபெறும்.



(Release ID: 1643185) Visitor Counter : 169