ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

உரங்கள் மற்றும் ரசாயனம் திருவிதாங்கூர் நிறுவனம் (FACT) கோவிட் -19 க்கு எதிராக போராடும் கேரள அரசுக்கு ஆதரவு தருகிறது.

Posted On: 31 JUL 2020 3:48PM by PIB Chennai

இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் ஒரு பொதுத்துறை நிறுவனமான உரங்கள் மற்றும் ரசாயனம் திருவிதாங்கூர் நிறுவனம் (FACT) கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில், 100 படுக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில், எலூர் நகராட்சியால் ஒரு கோவிட் முதல்-நிலை சிகிச்சை மையத்தை (CFLTC) அமைப்பதற்காக அதன் பிரதான ஆடிட்டோரியமான எம் கே கே நாயர் ஹாலில் இடம் ஒதுக்குவதன் மூலம் கேரள அரசுக்கு தனது ஆதரவை அளிக்கிறது. இந்த நோக்கத்திற்காக, நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் கீழ் கட்டில்கள், படுக்கைகள், மெத்தை போன்றவற்றை வழங்கியுள்ளது.

எலூரில் உள்ள உரங்கள் மற்றும் ரசாயனம் திருவிதாங்கூர் நிறுவனம் (FACT) M K K நாயர் ஹாலில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவில், அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. கிஷோர் ருங்க்தா, மற்றும் அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் செயலாளர் திரு.  சுபாஷ்,. நிதி இயக்குநர் திரு. கணேசன், நிதி இயக்குநர் திரு. ஏ.எஸ். கேசவன் நம்பூதிரி, நிர்வாக இயக்குநர் (உற்பத்தி ஒருங்கிணைப்பு), திரு.  கே.வி.பாலகிருஷ்ணன் நாயர், (சிறப்பு இயக்குநர், நிதி), & நிறுவனத்தின் செயலாளர் மற்றும் திரு. ஏ.ஆர்.மோகன் குமார், பொது மேலாளர் (மனித வள மற்றும் நிர்வாகம்)  ஆகியோர் முன்னிலையில் எலூர் நகராட்சியின் தலைவர் திருமதி. சி.பி. உஷாவிடம் ஓப்படைத்தார்.   

******



(Release ID: 1642623) Visitor Counter : 182