ஜல்சக்தி அமைச்சகம்
நமாமி கங்கைத் திட்டம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு மேன்மை அளித்துள்ளது: 'பிரதமரின் 2020ம் ஆண்டுக்கான பொது நிர்வாக மீச்சிறப்பு விருது' பெறுவதற்கு சேர்க்கப்பட்டுள்ளது
Posted On:
29 JUL 2020 6:43PM by PIB Chennai
'பிரதமரின் 2020ம் ஆண்டுக்கான பொது நிர்வாக மீச்சிறப்பு விருது' பெறுவதற்கு இந்த ஆண்டு நமாமி கங்கைத் திட்டம்சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்ட கங்கை குழுக்களின் ஊக்குவிக்கும் முதுநிலை அதிகாரிகள் மற்றும் உத்தரப் பிரதேச மாவட்ட மேஜிஸ்திரேட்களுடன் கலந்துரையாடிய தூய்மை கங்கை தேசிய இயக்ககத்தின் இயக்குனர் திரு ராஜிவ் ரஞ்சன் மிஸ்ரா, இந்தஆண்டுக்கான 'பிரதமரின் 2020ம் ஆண்டுக்கான பொது நிர்வாக மீச்சிறப்பு விருது' பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். "கங்கைத் தூய்மைத் திட்ட சாதனைகளைச் சமர்ப்பிக்க உத்தரப் பிரதேசத்துக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது; நாடெங்கும் ஆறுகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை அது ஊக்குவிக்கும்" என்று திரு ராஜிவ் ரஞ்சன் மிஸ்ரா கூறினார். உத்தரப் பிரதேசத்தின் 26 மாவட்ட கங்கைக் குழுக்களின் முயற்சி பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்றார். இந்தக் குழுக்கள், மாவட்ட நிலையில் உள்ளூர் குடிமக்களுடன் இணைந்து கங்கை புத்துயிரூட்டல் மற்றும் தூய்மைக்குப் பணியாற்றுகின்றன. இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்ட பின்னர் கங்கையின் தூய்மையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கங்கைக் கரையோரம் ஏற்பட்டுள்ள இயற்கை விவசாயம், உயிரி பல்திறத்தன்மை மேம்பாடு ஆகியன உள்ளூர் நிலையில் வேலைவாய்ப்பு வசதியை உயர்த்தியுள்ளன.
------
(Release ID: 1642341)
Visitor Counter : 149