ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-யும் எஸ்பிஐ கார்டும் இணைந்து ரூபே பிளாட்பாரத்தில் தொடுதல் இல்லாத கிரிடிட் கார்டை இணை-பிராண்டாக தொடங்கி உள்ளன
Posted On:
28 JUL 2020 12:18PM by PIB Chennai
மாண்புமிகு பிரதம மந்திரியின் சுய-சார்பு இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரியுங்கள் ஆகிய திட்டங்களின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்யும் மற்றொரு முன்னெடுப்பு நடவடிக்கையாகவும், மாண்புமிகு ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில்கள் அமைச்சர் திரு.பியூஷ் கோயலின் சுய-சார்பு இந்தியாவை அடைவதற்காக தன்னிறைவை பெருமளவில் அடைய வேண்டும் மற்றும் உலகத்தில் வலிமை பெற்ற நாடாக நிலை நிற்க வேண்டும் என்ற குறிக்கோளை அடையும் நடவடிக்கையாகவும் இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-யும், எஸ்பிஐ கார்டும் இணைந்து ரூபே பிளாட்பாரத்தில் தொடுதல் இல்லாத கடன் அட்டையை இணை-பிராண்டாக அறிமுகப்படுத்தியுள்ளன. ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில் அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இந்தப் புதிய கடன் அட்டை சேவையை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில் அமைச்சர் திரு. பியூஷ் கோயல் “மாண்புமிகு பிரதம மந்திரி எதிர்பார்ப்பது போல நாங்கள் இந்திய ரயில்வேயின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியாவில் தயாரியுங்கள் என்ற முன்னெடுப்புகள் மூலம் சுய-சார்பு இந்தியா என்பதை அடைய அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என்று தெரிவித்தார். ரூபே பிளாட்ஃபாரத்தில் செயல்படக்கூடிய ஐ.ஆர்.சி.டி.சி – எஸ்பிஐ இணை பிராண்டு கார்டு என்பது ரயில்வே முன்னெடுத்துள்ள “இந்தியாவில் தயாரியுங்கள்” என்பதை நோக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான நிதிப் பரிமாற்றச் சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தப் புதிய ரூபே கடன் அட்டையானது அருகமைப் புலத்தொடர்பியில் (NFC) தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார்டைப் பயன்படுத்துபவர்கள் விற்பனை இடங்களில் உள்ள இயந்திரங்களில் கடன் அட்டையை நுழைத்து இழுக்க வேண்டிய தேவையில்லாமல் இயந்திரத்தில் லேசாகத் தொட்டாலே விரைவான நிதிப்பரிமாற்றம் நடைபெற்றுவிடும்.
அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய இணை-பிராண்ட் கடன் அட்டையானது ரயில்வே பயணிகளுக்கு அவர்களின் பயணத்தில் அதிகபட்ச சேமிப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. சில்லறை வணிகம், உணவு மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றில் சேமிப்பு கிடைப்பதோடு பரிமாற்றக் கட்டணத்தில் தள்ளுபடியும் கிடைக்கும்.
இந்தக் கார்டை பயன்படுத்துபவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் வழியாக முதல் வகுப்பு ஏசி, 2ஆம் வகுப்பு ஏசி, 3ஆம் வகுப்பு ஏசி, எக்ஸ்கியூட்டிவ் சேர் கார், ஏசி சேர் கார் போன்ற வகுப்புகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்தால் 10 சதவீதத் தொகையைத் திரும்பப் பெறுவார்கள். அதே போன்று ஆன்லைன் நிதிப்பரிமாற்றக் கட்டணத் தள்ளுபடி, (பரிமாற்றத் தொகையில் 1%), 1 சதவீதம் எரிபொருள் கூடுதல் வரித் தள்ளுபடி மற்றும் ஓராண்டில் (காலாண்டுக்கு ஒரு முறை) நான்கு முறை பிரீமியம், ஓய்வறையை இலவசமாகப் பயன்படுத்துதல் போன்ற பலன்களும் அவர்களுக்குக் கிடைக்கிறது. குறைந்தபட்ச செலவுத் தொகையோடு இந்தக் கார்டை ஆக்டிவேஷன் செய்யும் போது கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு 350 போனஸ் ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும். பயனாளிகள் இவ்வாறு சேரும் ரிவார்டு புள்ளிகளை ஐ.ஆர்.சி.டி.சி-யின் பயணச் சீட்டு முன்பதிவு வலைத்தளத்தில் பயணச் சீட்டு வாங்கும் போது பணத்திற்குப் பதிலாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரயில்வே பயணத்தின் மூலம் சேமிப்பதோடு மட்டும் அல்லாமல் இந்த ஐ.ஆர்.சி.டி.சி - எஸ்பிஐ கார்டு ஆன்லைன் விற்பனை போர்ட்டல்களிலும் பலவிதப் பலன்களை வழங்குகிறது. இ-காமர்ஸ் வலைத்தளங்களில் வாடிக்கையாளர்கள் பொருள்கள் வாங்கும் போது தள்ளுபடி கிடைக்கும்.
*****
(Release ID: 1642003)
Visitor Counter : 268