அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் தொழில்நுட்ப தொழிலதிபர்களாக சிறந்து விளங்கும் பெண்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2020 11:39AM by PIB Chennai
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தொழிலதிபர்களாக மூன்று பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித அடிப்படையிலான (ஸ்டெம்) பொம்மைகளையும், பலகை விளையாட்டுக்களையும் உருவாக்கியுள்ள திருமிகு. பிரியங்கா பிரபாகர், கொவிட்-19 முடக்க நிலை காலத்தில், இவைகளை விற்று ரூ.40 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார். வடோதராவில் ஒடுக்கப்பட்ட பெண்களிடையே பணியாற்றி, முடக்க நிலை காலத்தில் இயற்கையான ஜவுளி வகைகளையும், அலங்கார அணிகளையும் உருவாக்கிய திருமிகு.மேக்னா காந்தி, அவற்றை ரூ.25 லட்சத்திற்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார்.
சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மீனவ மக்களிடையே பணியாற்றிய திருமிகு. ஸ்னேகல் வர்மா, கொவிட்-19 முடக்க நிலையின் போது அவர்கள் அதிக அளவில் மீன் பிடிப்பதற்கான நுட்பங்களை உருவாக்கி மீனவர்களுக்கு உதவினார். அவர் உருவாக்கியுள்ள இந்தக் கருவி நீரின் தரத்தை மேம்படுத்துவதோடு, அதிகமான மீன்களை பிடிக்கவும் உதவுகிறது.
விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1641982
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1642001)
வருகையாளர் எண்ணிக்கை : 241