பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்திய யோகா நிறுவனத்தின் சார்பில், பிரதமரின் கேர்ஸ் நிதியத்திற்கு நன்கொடை அளிப்பதற்கான கேட்பு வரைவு மற்றும் காசோலை, புது தில்லியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் வழங்கப்பட்டது
Posted On:
28 JUL 2020 7:10PM by PIB Chennai
கோவிட் பெருந்தொற்று காரணமாக, உலகம் முழுவதும் யோகா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஏற்கனவே, யோகா உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் திரு.நரேந்திரமோடி மேற்கொண்ட முயற்சியால், ஐ.நா.சபையால், சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்ட பிறகு, மேலும் பன்மடங்கு பிரபலம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை யோகா கலை பற்றி அறிந்திராதவர்கள் கூட, கோவிட் பெருந்தொற்று மற்றும் அதன் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, யோகாவில் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய யோகா நிறுவனம் (பாரதீய யோக் சன்ஸ்தான்) சார்பில், பிரதமரின் கேர்ஸ் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கேட்பு வரைவு மற்றும் காசோலையை பெற்றுக்கொண்டு பேசிய டாக்டர் ஜிதேந்திரசிங், பிரதமர் மோடி கூறியதுபோல, ஹாலிவுட் முதல் ஹரித்வார் வரை உள்ள மக்கள், கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில், யோகா-வின் பலன்களை நன்கு அறிந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்திய யோகா நிறுவனத்துடன் தமக்குள்ள நீண்ட நாள் தொடர்புகளை நினைவுகூர்ந்த டாக்டர் ஜிதேந்திரசிங், தொலைக்காட்சி அல்லது பிற வகையான மின்னணு ஊடகங்கள் ஏதும் இல்லாத காலத்திலிருந்தே, யோகா கலையை போதிக்கவும், பிரபலப்படுத்தவும், இந்நிறுவனத்தின் தன்னார்வலர்கள் அயராது உழைத்து வருவதாகக் கூறினார்.
இந்திய யோகா நிறுவனத்தின் பொதுச் செயலாளர் தேஸ் ராஜ் தலைமையில், தேசிய செயற்குழு உறுப்பினர் சரத் சந்தர் அகர்வால், டெல்லி கிளை தலைவர் லலித் குமார் குப்தா உள்ளிட்டோர் அடங்கிய தூதுக் குழுவினர், அமைச்சரை சந்தித்தனர்.
*****
(Release ID: 1641888)
Visitor Counter : 232