நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இந்திய தர நிர்ணய அமைப்பின் செல்போன் செயலியான ‘BIS – Care’ மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பின் மின்னணு-தர நிர்ணயம், இணக்க மதிப்பீடு மற்றும் பயிற்சி இணையதளத்தை திரு.ராம் விலாஸ் பாஸ்வான் தொடங்கிவைத்தார்

Posted On: 27 JUL 2020 6:30PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைப்பின் செல்போன் செயலியான ‘BIS-Care’ மற்றும் நுகர்வோருக்கான  இணையதளமான  www.manakonline.in   தர நிர்ணயம், மின்னணு-இந்திய தர நிர்ணய அமைப்பின் இணக்க மதிப்பீடு மற்றும் பயிற்சி இணையதளத்தைமத்திய நுகர்வோர் விவகாரங்கள்உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு.ராம் விலாஸ் பாஸ்வான்  இன்று தொடங்கிவைத்தார்‘BIS-Care’ செல்போன் செயலியை எந்தவொரு ஆன்டிராய்டு தொலைபேசியிலும்  பயன்படுத்தலாம்.   இந்த செயலி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் செயல்படுவதோடுகூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எஸ்.. முத்திரை மற்றும் ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களின் தரம் உண்மையானவையா என்பதை நுகர்வோர் பரிசோதிப்பதுடன், இந்த செயலியைப் பயன்படுத்தி புகார் செய்யவும் முடியும்நுகர்வோரின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

 

பொருட்களின் தர நிர்ணயம் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதைக் கண்காணித்து சான்றிதழ் வழங்கும் பணியையும் இந்திய தர நிர்ணய அமைப்பு மேற்கொண்டு வருவதாகவும், திரு.பாஸ்வான் தெரிவித்தார்.   இந்திய தர நிர்ணய அமைப்பின் மின்னணு முறையிலான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான திறனை, இந்திய தர நிர்ணய அமைப்பு வலுப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.   அந்த அமைப்பின் அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைக்கும் தளமான இந்த மின்னணு நடைமுறை, தொழிற்சாலைகள் மற்றும் சந்தை கண்காணிப்பு மற்றும் செல்போன் செயலி அடிப்படையிலான வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்காணிப்பு நடைமுறைகளையும் மேற்கொள்கிறது.   தரம் மற்றும் தரமான பொருட்களைப் பற்றி நுகர்வோர் அறிந்து கொள்வதை உறுதி செய்வதோடு, தரமற்ற பொருட்களின் விநியோகத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.   நுகர்வோர் குழுக்களைப் பதிவு செய்தல்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் மற்றும் அதற்கு ஒப்புதல் அளித்தல் போன்றவற்றோடு, புகார் மேலாண்மை குறித்த பணிகளில் நுகர்வோரை ஈடுபடுத்துவதற்கான இணையதளம் ஒன்றை இந்திய தர நிர்ணய அமைப்பு உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் தமது உரையின் போது தெரிவித்தார்

ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விவரித்த திரு.ராம் விலாஸ் பாஸ்வான், தர நிர்ணயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடுநாட்டிலுள்ள பிற தர மேம்பாட்டு நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கான திட்டத்தையும் இந்திய தர நிர்ணய அமைப்பு உருவாக்கி வருவதாகக் கூறினார்.    ஆய்வில் உள்ள இந்த முடிவு, விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.  

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு.பாஸ்வான், கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ளத் தேவையான பல்வேறு சலுகைகள் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்தரக் குறியீடு வழங்குவதற்கான குறைந்தபட்சக் கட்டணம் 40% வரை குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர்எனினும், இந்தக் கட்டணத்தை இரண்டு தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.   உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும், 2020 செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

                                                              ****


(Release ID: 1641743) Visitor Counter : 523