அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இணையக் கருத்தரங்கம் வாயிலாக பிரபலமான அறிவியல் படைப்புகள் பகிரப்படும் போது இந்தியா முழுமைக்கு மட்டுமல்லாமல் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் அது சென்றடையும்.

Posted On: 25 JUL 2020 4:08PM by PIB Chennai

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்பாடல் கவுன்சில் (NCSTC), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) ஒரு தன்னாட்சி நிறுவனமான விக்ஞான் பிரசார் இணைந்து இந்த வாரத் தொடக்கத்தில் “பிரபலமான அறிவியல் படைப்புகள்” என்ற தலைப்பில் இரண்டு இணையக் கருத்தரங்குகளை, ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதுவதற்கான திறன்களைப் பெருக்குதல் (AWSAR) திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி அறிஞர்களின் அறிவியல் தகவல் தொடர்புத் திறனை வளர்ப்பதற்காக.ஏற்பாடு செய்தனர்.

 

நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், இஸ்ரேல் போன்ற 12 நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அறிவியல் தகவல் தொடர்பின் முக்கியத்துவம், ஆராய்ச்சியிலிருந்து பிரபலமான கட்டுரைகளை எழுதுதல், பிரபலமான அறிவியல் எழுத்தின் உதவிக்குறிப்புகள் மற்றும் நுட்பங்கள் குறித்து அறிமுகப்படுத்தினர்.

 

டாக்டர் மனோஜ் படேரியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசியக் கவுன்சில் (NCSTC), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) தலைவர், மற்றும் டாக்டர் பி.கே. தியாகி, விஞ்ஞானி, விக்ஞான் பிரசர் (Scientist F, VigyanPrasar) ஆகியோர் பார்வையாளர்களுடன் உரையாற்றியதுடன், அறிவியல் தொடர்பு பற்றிய உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பதிவுசெய்யப்பட்ட மொத்தம் 1282 பங்கேற்பாளர்களுடன் இணையக் கருத்தரங்கு பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

"தனது ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பிரபலமான அறிவியல் கதையை ஒருவர் எழுதுவது, அறிவின் ஆழமான- கூர்மையான அறிவியலின் பரந்த கேள்விகளுக்கும், சமூகத்தின் தேவைகளுக்கும் அது எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதில் அதிசயங்களைச் செய்கிறது. எனது ஆராய்ச்சியை எந்த வயதினரும், எந்தக் கல்விப் பின்னணியில் உள்ளவர்களுக்கும், புரிந்துகொள்ளும், பாராட்டும்,  உற்சாகத்தைத் தூண்டும் விதத்தில் எனது ஆராய்ச்சியை விளக்க முடிந்தால், பிரச்சினையின் பல பரிமாணங்களை நானே நன்கு புரிந்து கொண்டேன்! ”என்று பொருள் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் (DST) செயலாளரும், பேராசிரியருமான அசுதோஷ் சர்மா தெரிவித்தார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0031Y8M.jpg

 

*****(Release ID: 1641214) Visitor Counter : 118