மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

“இந்தியாவில் படிப்போம்” திட்டத்தின் கீழ் முதன் முறையாக இன்டுசாட் தேர்வை இந்தியா நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2020 7:05PM by PIB Chennai

“இந்தியாவில் படிப்போம்” திட்டத்தின் கீழ் முதன் முறையாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இன்டுசாட் தேர்வை நேற்று நடத்தியது. நேபாளம், எத்தியோப்பியா, பங்களாதேஷ், பூடான், உகாண்டா, தான்சானியா, ருவாண்டா, இலங்கை, கென்யா, ஜாம்பியா, இந்தோனேஷியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5,000 தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தேசிய தேர்வு முகமை இணையதளம் வழியாக இதனை நடத்தியது. ”இந்தியாவில் படிப்போம்” திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக, கல்வி உதவித் தொகை மற்றும் சேர்க்கைக்காக இன்டுசாட் தேர்வு அயல்நாட்டு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1640877) வருகையாளர் எண்ணிக்கை : 290
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , हिन्दी , Manipuri