ரெயில்வே அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        யுஐசி-ன் துணைத் தலைவராக ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை இயக்குனர் திரு.அருண் குமார் நியமனம்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                22 JUL 2020 7:14PM by PIB Chennai
                
                
                
                
                
                
                யுஐசி பாதுகாப்புத் தளத்தின் துணைத் தலைவராக, ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குனர் திரு.அருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020 ஜூலை முதல் 2022 ஜூலை வரை இந்தப் பொறுப்பை ஏற்பார். அதற்கு பிறகு 2022 ஜூலை முதல் 2024 ஜூலை வரை இந்த அமைப்பின் தலைவராக இவர் இருப்பார். இந்தத் தகவலை யுஐசி-ன் தலைமை இயக்குனர் திரு.பிரான்கோயிஸ் தவனே, ரயில்வே வாரியத்தின் தலைவர் திரு.வினோத் குமார் யாதவிடம் தெரிவித்துள்ளார். 
 
 
*****
                
                
                
                
                
                (Release ID: 1640601)
                Visitor Counter : 158