தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தில்லி தேசிய தலைநகர்ப் பகுதி அரசுக்கு, அரசு விளம்பரப் பொருளடக்கக் கட்டுப்பாட்டு குழு (சி சி ஆர் ஜி ஏ), நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

Posted On: 20 JUL 2020 5:18PM by PIB Chennai

அரசு விளம்பரப் பொருளடக்கக் கட்டுப்பாட்டுக் குழு (சி சி ஆர் ஜி ஏ), தில்லி அரசு 16 ஜூலை 2020 அன்று செய்தித்தாள்களில் வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக, தில்லி தேசியத் தலைநகர்ப் பகுதியின் அரசாங்கத்திற்கு இன்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. தில்லி அரசு வெளியிட்ட இந்த விளம்பரம் குறித்து, தில்லி அரசு எதற்காக மும்பை செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும், அரசியல் செய்தியை வெளியிடுவதே இந்த விளம்பரத்தின் நோக்கம் என்றும் சமூக வலைதளங்களில் இந்த விளம்பரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்தையடுத்து சி சி ஆர் ஜி ஏ தானாகவே முன்வந்து இந்த விளம்பரம் குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தில்லி தேசியத் தலைநகரப் பகுதி அரசின் கல்வித்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இயக்குரகத்தால் இந்த ஒரு பக்க விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

 

13 மே 2015 தேதியன்று வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற விதிமுறைகளின்படி அரசு வெளியிடும் விளம்பரங்கள், அரசின் அரசியல் சாசன சட்ட ரீதியான கடப்பாடுகள், குடிமக்களின் உரிமைகள் ஆகியவற்றுக்கு தொடர்புடையவையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

இந்த விதிமுறைகளின் படிபின்வரும் விஷயங்கள் குறித்து தில்லி அரசு தனது விளக்கங்களை அளிக்க நோட்டீஸ் பெறப்பட்டநாளிலிருந்து,60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

  1. வெளியிடப்பட்ட விளம்பரத்தால் அரசுக்கு ஏற்பட்ட செலவுத்தொகை

 

  1. இந்த விளம்பரம் வெளியிடப்பட்டதன் நோக்கம், குறிப்பாக தில்லி பதிப்பைத் தவிர பிற பதிப்புகளில் இந்த விளம்பரத்தை வெளியிட்டதன் நோக்கம்

 

  1. அரசியல் ஆளுமைகளைப் போற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை இந்த விளம்பரம் எவ்வாறு மீறாமல் உள்ளது

 

  1. இந்த விளம்பரம் எந்தெந்த செய்தித்தாள்களில், பதிப்புகளில் வெளியிடப்பட உத்தேசிக்கப்பட்டிருந்தது என்பதற்கான மீடியா பிளான் விளம்பர திட்டம் தரப்பட வேண்டும்

 

13 மே 2015 அன்று உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, “அரசு நிதியால் வெளியிடப்படும் அனைத்து ஊடகத் தளங்களிலான விளம்பரங்களின் பொருளடக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்காக, தூய்மையான நடுநிலை கொண்ட, எந்த சாராருக்கும் சாதகமா இல்லாத நிலை கொண்ட, தங்களது துறையில் திறம்படச் செயல்பட்ட நபர்கள் கொண்ட மூன்று உறுப்பினர் கொண்ட அமைப்பை,மத்திய அரசு 6 ஏப்ரல் 2016 அன்று ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறுவது குறித்து பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை விசாரித்து, அவை தொடர்பாக தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்கான அதிகாரம், இந்தக் குழுவுக்கு உள்ளது. உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறிய அல்லது விதிமுறைகளில் இருந்து பிறழ்ந்து நடக்கும் செயல்பாடுகள் குறித்து, இந்தக் குழு தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்து தவறுக்கான திருத்தச் செயல்களைப் பரிந்துரை செய்யலாம்.

தற்போது இக்குழுவிற்கு முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. ஓம் பிரகாஷ் ராவத் தலைவராக உள்ளார். விளம்பர அமைப்புகளின் ஆசிய பேரமைப்பின் தலைவரும், ஐ ஏ அமைப்பின் முன்னாள் தலைவருமான திரு.ரமேஷ் நாராயண்; பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர் டாக்டர். அசோக் குமார் டாண்டன் ஆகியோர் இக்குழுவி உறுப்பினர்கள்.

 

 

*****


(Release ID: 1639990) Visitor Counter : 257