பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

கேந்திர ரீதியான எரிசக்திக்கான அமெரிக்க-இந்திய கூட்டணி குறித்த கூட்டறிக்கை

Posted On: 17 JUL 2020 9:10PM by PIB Chennai

பெருமளவிலான மனித உயிரிழப்பினை ஏற்படுத்தியுள்ள உலகளாவிய பெருந்தொற்றுக்கிடையே எரிசக்தித் தேவை, உலகளாவிய எரிசக்திக்கான சந்தைகள் மற்றும் நிலைத்த எரிசக்தி வளர்ச்சி ஆகியவற்றை பாதித்து வரும் பின்னணியில் அமெரிக்கா-இந்தியா ஆகிய இருநாடுகளுக்கிடையே ஆன முழுமையான உலகளாவிய கேந்திர ரீதியான கூட்டணியின் முக்கியத்துவம் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்க-இந்திய கேந்திர ரீதியான எரிசக்திக்கான கூட்டணியின் கூட்டம் மெய்நிகர் வழியாக இன்று நடைபெற்றது. இக்கூட்டணியின் முன்னேற்றம், முக்கிய சாதனைகளை வலியுறுத்துவது, ஒத்துழைப்பிற்கான புதிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஆகிய நோக்கத்துடன் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அமெரிக்க எரிசக்தி அமைச்சர் டான் ப்ரூலெட் மற்றும் இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறைகளின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகிய இருவரும் இணைந்து தலைமையேற்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் உத்தரவிற்கு இணங்க 2018 ஏப்ரலில் உருவாக்கப்பட்ட இந்த அமெரிக்க-இந்திய கேந்திர ரீதியான எரிசக்திக்கான கூட்டணி இரு நாடுகளின் உறவுகளில் கேந்திர ரீதியான முக்கியத்துவம் வாய்ந்ததாக எரிசக்தி அமைகிறது என்பதை அங்கீகரித்தது. எரிசக்தித் துறையில் நீண்ட காலமாக இருந்து வந்த கூட்டணியின் மீது கட்டப்பட்ட இந்த அமைப்பு இரு அரசுகளின் ஒத்துழைப்பு மற்றும் இது தொடர்பான தொழில்துறைகளின் நேரடி ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மேடையை உருவாக்கியிருந்தது.

அமெரிக்காவும், இந்தியாவும் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி அணுகல் ஆகியவற்றில் அனைத்திற்கும் மேலான அணுகுமுறையைப் பகிர்ந்து கொண்டன. கேந்திர ரீதியான எரிசக்திக்கான கூட்டணியானது இருதரப்பிலும் அமைப்புகளுக்கு இடையிலான தொடர்பினை நான்கு முக்கிய ஒத்துழைப்பிற்கான தூண்களின் மீதாக உருவாக்கியிருந்தது. அவையாவன: (1) மின்சாரம் மற்றும் எரிசக்தியின் செயல்திறன் (2) எண்ணெய் மற்றும் எரிவாயு (3) மறுசுழற்சிக்கான எரிசக்தி மற்றும் (4) நீடித்த வளர்ச்சி.

மேற்கூறிய இந்த நான்கு தூண்களின் மூலம் தூய்மையான, மலிவான, நம்பிக்கையான எரிசக்தியைப் பெறும் வகையில் நவீனப்படுத்துவது; மின்சாரத் துறையில் செயல்திறன், இழைவுத்தன்மை, சூழல் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவது; நீண்ட கால எரிசக்தி மேம்பாட்டின் மூலம் உள்ளடக்கிய, நீடித்த பொருளாதார வளர்ச்சியை வென்றெடுப்பது; எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் மற்றும் கட்டமைப்பிற்கான முதலீடு ஆகியவற்றின் மூலம் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துவது; மறுசுழற்சி எரிசக்தியின் வளர்ச்சி, அமலாக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி, மறுசுழற்சி எரிசக்தித் திட்டங்களுக்கான நிதியாதாரத்தைப் பெறுவதை விரிவுபடுத்துவது; மற்றும் எரிசக்தி வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் நிலவும் சந்தைத் தடைகளைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் மின்சாரத் தொகுப்பு மற்றும் பகிர்மானத்திற்கான கருவிகள் ஆகியவற்றை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வந்தன. ஆசியா எட்ஜ் முன்முயற்சியின் கீழ்  இந்திய - பசிஃபிக் பிராந்தியத்தில் வலுவானதொரு எரிசக்திக் கூட்டாளியாக இந்தியாவை நிலை நிறுத்துகின்ற அமெரிக்க அரசின் முயற்சிகளுக்கும் இந்த கேந்திர ரீதியான எரிசக்திக்கான கூட்டணி உதவுகிறது.

மின்சாரத் தொகுப்புக் கருவியின் தாங்கு சக்தி மற்றும் நம்பிக்கைத் தன்மையை அதிகரிக்க அறிவார்ந்த மின்தொகுப்பு மற்றும் மின்சார சேமிப்புக்கருவிகள் குறித்து அமெரிக்க - இந்தியக் கூட்டணியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேறிய தூய்மையான எரிசக்திக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிலும் இரு நாடுகளும் முன்னிலையில் உள்ளன. கார்பன் கைப்பற்றல், பயன்பாடு மற்றும் சேமிப்பு ஆகியவை உள்ளிட்டு மின்உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி ஆகியவற்றுக்கான முன்னேறிய நிலக்கரித் தொழில்நுட்பங்கள், மிகவும் சிக்கலான கார்பன் டை ஆக்ஸைட் மின்சுழற்சியின் அடிப்படையிலான உருமாறும் மின்உற்பத்தி ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி ஆகிய புதிய தளங்களையும் அவர்கள் இன்று அறிவித்தனர். அமெரிக்க – இந்திய பொது அணுசக்திக்கான பணிக்குழுவின் மூலம் முன்னேறிய பொது அணுசக்தித் தொழில்நுட்பங்கள் மீதும் இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்காவிடம் எடுத்துக் கூறப்பட்டது.

அமைச்சக அளவிலான விளைவுகள்

கேந்திர ரீதியான மின்சக்திக்கான கூட்டணியின் கீழ் புதிய பணிகளுக்கான முன்னுரிமைகள் மற்றும் செய்துள்ள சாதனைகள் ஆகியவை குறித்தும் இரு தரப்பினரும் அறிவித்தனர்.

மின்சக்திக்கான பாதுகாப்புத் தன்மையை மேம்படுத்துவது

தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, சிறப்பான செயல்முறைகளை மேற்கொள்வது உள்ளிட்டு கேந்திர ரீதியான பெட்ரோலியக் கையிருப்பு செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பினைத் தொடங்குவதற்காக இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். தங்கள் நாட்டின்  கேந்திர ரீதியான எண்ணெய் சேமிப்பை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவின் கேந்திர ரீதியான பெட்ரோலியக் கையிருப்புக் களத்தில் இந்தியா எண்ணெயை சேமிப்பதற்கான வாய்ப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது

மறுசுழற்சி எரிசக்தி மற்றும் படிவ எரிபொருள் ஆதார வளங்களில் இருந்தும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை அதிகரிக்க உதவவும், மேம்பட்ட எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் தாங்குதிறன் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்கவும் பொது-தனியார் ஹைட்ரஜன் பணிக்குழு ஒன்றையும் இரு தரப்பினரும் இத்தருணத்தில் தொடங்கினர். மறுசுழற்சி எரிசக்தியில் இயங்கும் அதிக செயல்திறன் மிக்க கட்டிடங்களை வடிவமைக்கவும், கட்டவும் திறமை வாய்ந்த அடுத்த தலைமுறை கட்டிடக் கலைஞர்களை உருவாக்குவதற்கென கல்லூரி அளவிலான போட்டியை 2021இல் இந்தியா முதன் முறையாக நடத்தவிருக்கும் சூரிய ஒளியின் மூலமான மின்சாரத்திற்கான போட்டியில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் அவர்கள் கையெழுத்திட்டனர். மேம்பாடு மற்றும் முன்னேறிய தூய்மையான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கான கூட்டு ஆராய்ச்சி சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவி அமைப்பின் ஆதரவுடன் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எரிசக்திக்கான தெற்காசியக் குழுவின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் எரிசக்தித் துறையின் தேசியப் பரிசோதனை சாலைகள் மற்றும் இந்தியாவின் புதிய மற்றும் மறுசுழற்சி எரிசக்திக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பு நடவடிக்கையையும் இரு தரப்பினரும் இத்தருணத்தில் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.

நிலைக்கத்தக்க உயிரிஎரிபொருள், குறிப்பாக பையோ எத்தனால், உற்பத்தி மற்றும் பயன்பாடு, மறுசுழற்சி செய்யப்பட்ட டீசல் மற்றும் இதர முன்னேறிய உயிரி எரிசக்திகள் ஆகியவை குறித்த தகவல்கள் பரிமாற்றம், வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்திற்கென நிலைக்கத்தக்க உயிரி எரிபொருள்களுக்கான  வாய்ப்புகள் குறித்து விவாதம் ஆகிய கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள், இதர ஆர்வமுள்ள பகுதிகள் குறித்துமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர். ஒத்துழைப்பிற்கான வாய்ப்புள்ள மற்றொரு துறை என்பது தனியார் துறையில் இருதரப்பு முதலீடுகளுக்கு ஊக்கமளிப்பதாகும். உயிரிக்கழிவை உயிரிவாயுவாக மாற்றுவதில் உள்ள பொருளாதார ரீதியான மதிப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் ஒத்துழைப்பது குறித்தும் இரு தரப்பும் முயற்சிகள் எடுக்கும்.

மின் அமைப்பினை நவீனப்படுத்துவது

மறுசுழற்சி எரிசக்திக்கான இலக்குகளை நிறைவேற்ற பேராவலுடன் இந்தியா செயல்பட்டு வரும் நிலையில், தனது எரிசக்தித்துறையை மாற்றியமைக்க முனைந்து வரும் நிலையில், மின்தொகுப்பிற்குள் மறுசுழற்சி எரிசக்தி மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒன்றிணைப்பது, நிலைநிறுத்துவது; மின் பகிர்மானத் துறையை நவீனப்படுத்துவது; மறுசுழற்சி எரிசக்திக்கான மாநில அளவிலான திட்டமிடலுக்கு உதவி செய்வது;  எரிசக்திப் பகிர்மான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்தளிப்பது; மின்சார வாகனங்கள்; மேற்கூரைகளில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது; மின்கல சேமிப்பு; சந்தையை மறுவடிமைப்பு செய்வது, மின் தொகுப்பல்லாத எரிசக்தி கிடைப்பதை அதிகரிப்பது ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது எனவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. தனியார் பங்கேற்பினை அதிகரிப்பதன் மூலம் நம்பகமான, நாள் முழுவதற்குமான, தரமான மின்சார வசதி கிடைப்பதை உறுதி செய்வது; நுகர்வோரின் மையத்தன்மையை அதிகரிப்பது; இந்தியா முழுவதிலும் திறன்மிகு மின் அளவிகளை நிறுவுவது; இந்தியாவில் உள்ள திறன்மிகு மின் தொகுப்புக்கான அறிவு மையத்தை திறன்மிகு மின் தொகுப்புக்கான ‘சிறப்பான செயல்பாடு மிக்க உலகளாவிய மையமாக’ நிறுவுவது ஆகியவற்றுக்கென  பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் பகிர்மானத் துறையை நவீனப்படுத்துவதில் இரு தரப்பும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கென சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு புதிதாக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான கடன் உறுதியை ஏற்பாடு செய்வது என்ற கருத்தாக்கத்தை சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவி நிறுவனமும், அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சிக்கான நிதியுதவிக் கழகமும் தற்போது உருவாக்கி வருகின்றன.

செயல்பாட்டிற்கான செலவுகள், தோல்விக்கான அபாயங்கள் ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் மறுசுழற்சி எரிசக்தியின் ஊடுருவலையும், பல்வேறுபட்ட எரிசக்திக்கான தேவையையும் அதிகரிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிலக்கரி மின்உற்பத்தி நிலையங்களின் நெகிழ்வான செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன. 21ஆம் நூற்றாண்டுக்கான நிலக்கரி மூலமான எரிசக்தி அமைப்புகளை வளர்த்தெடுப்பதற்கான அமெரிக்க எரிசக்தித்துறையின் ஃபர்ஸ்ட் என்ற (நெகிழ்வான, புதுமையான, நிலைக்கத்தக்க, சிறிய, உருமாற்றத்தன்மை கொண்ட) முயற்சியில் கவனம் செலுத்தி, கார்பன் கைப்பற்றல், பயன்படுத்துதல், சேமித்தல் ஆகியவற்றின் மூலம் மிகக் குறைவான அளவிலிருந்து முற்றிலும் இல்லாத கரியமில வாயு உமிழ்வை வழங்கக்கூடிய  முன்னேறிய, உயர்திறனுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து ஒத்துழைப்பது எனவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

தொழில்நுட்ப ஒத்துழைப்பின் புதிய துறைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான புதிய வணிக மாதிரிகள் மற்றும் முடிவெடுக்கும் கருவிகளின் வளர்ச்சி; திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்கள்; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப மேலாண்மைக் கருவிகளை ஏற்றுக்கொள்வது; பொருளாதாரத் துறைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவது ஆகியவையும் அடங்கும்.

எரிசக்தி செயல்திறன், பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்

மேம்படுத்தப்பட்ட கட்டிட விதிமுறைகள், எதிர்காலத்திற்கான அறிவார்ந்த கட்டிடங்களை வடிவமைத்தல், செயல்படுத்தல், அறிவார்ந்த மின் அளவிகள், தேவையை உருவாக்குவோரின் பிரதிபலிப்பு, கட்டிடங்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அவற்றை மறுசீரமைப்பது, எரிசக்தி சேமிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுப்பது, உள்ளரங்கில் உள்ள காற்றின் தரத்தை மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் கட்டிடங்கள் மற்றும் கருவிகளின் செயல்திறனை மேம்படுத்த அமெரிக்காவும் இந்தியாவும் செயல்பட்டு வருகின்றன. பகிர்ந்தளிக்கப்பட்ட எரிசக்தி ஆதார வளங்களுக்கான திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவி  மற்றும் நடத்தையின் மூலம் எரிசக்தியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆகியவற்றை உருவாக்குவதிலும் இருதரப்பும் செயல்பட்டு வருகின்றன. தொழில்துறையில் எரிசக்தியின் செயல்திறனை மேம்படுத்தவும் இருதரப்பும் செயல்பட்டு வருவதோடு, ஐஎஸ்ஓ 50001 தரத்திற்கு ஏற்ற வகையில் முழுமையானதொரு எரிசக்தி மேலாண்மையை முன்னெடுப்பதிலும் அவை செயல்படும். கொரோனா பெருந்தொற்றிற்கான எதிர் நடவடிக்கையாக சுகாதாரமிக்க, செயல்திறன் மிக்க வகையில் எரிசக்தியை பயன்படுத்தும் கட்டிடங்களுக்கென  “காற்றின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த குளிரூட்டும் வசதியை மறுசீரமைப்பது” என்ற “ரெய்ஸ்” என்ற புதியதொரு நடவடிக்கையை சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவி அமைப்பும் எரிசக்தி செயல்திறன் சேவைகள் நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து தொடங்கியுள்ளன. இந்த முன்முயற்சி பொதுத்துறையைச் சேர்ந்த கட்டிடங்களில் படிப்படியாக அமலாக்கப்படும்.

மின்சார வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு ஊக்கமளிப்பது

கேந்திர ரீதியான எரிசக்திக் கூட்டணி நிறுவப்பட்டதிலிருந்து இருதரப்பு ஹைட்ரோகார்பன் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இருதரப்பு ஹைட்ரோகார்பன் வர்த்தகம் 2019-20ஆம் ஆண்டில் 9.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டது. இது 2017-18லிருந்து 93 சதவீதம் அதிகரித்துள்ளதைக் குறிக்கிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே அதிக அளவில் ஹைட்ரோகார்பன் வர்த்தகத்தை ஊக்குவிப்பதையும் உறுதிப்படுத்தின.

இந்தியாவின் எரிசக்தித் துறையில் இயற்கை எரிவாயுவின் பங்கினை அதிகரிப்பது என்ற இந்திய அரசின் நோக்கத்திற்கு உதவி செய்ய அமெரிக்க-இந்திய இயற்கை எரிவாயுவிற்கான பணிக்குழுவின் மூலம் அமெரிக்க இந்திய தொழில்துறைகள் புதுமையான திட்டங்களின் அடிப்படையில் புதிய வணிக ரீதியான கூட்டணிகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தொடர்ச்சியான பல கொள்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கான பரிந்துரைகளையும் உருவாக்கியுள்ளன. எரிசக்தித் துறை முழுவதிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் ஆகியவை குறித்த தொழில்துறையின் கருத்தோட்டங்களை வழங்கும் வகையில் எண்ணற்ற பொது-தனியார் பேச்சுவார்த்தைகளையும் இரு தரப்பும் நடத்தியிருந்தன.

நமது பொது அணுசக்திக்கான ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் தங்களது அரசுகளின் வலுவான உறுதிப்பாட்டையும் இருதரப்பும் கவனத்தில் எடுத்துக் கொண்டன. நமது கேந்திர ரீதியான உறவின் மிக முக்கியமானதொரு மைல் கல்லாகத் திகழும் கொவ்வாடாவில் உருவாகவுள்ள வெட்டிங்ஹவுஸ் வணிகரீதியான அணு உலைத்திட்டத்தின் சமீபத்திய முன்னேற்றத்தையும் அவை வரவேற்றன.

எரிசக்தித் துறையில் தேசிய அளவிலான வளர்ச்சிக்கான பரஸ்பர நோக்கத்திற்கு உதவி செய்வதெனவும் இரு தரப்பையும் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்கென ஒரு பட்டியலைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்டு முதலீட்டை ஊக்குவிப்பது எனவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

உள்ளிணைக்கப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பது

எரிசக்திக்கான தரவு மேலாண்மைக்கான முறைகள் மற்றும் சிறப்பான செயல்முறைகளை மேற்கொள்வது; எரிசக்தி முன்மாதிரியில் கொள்ளளவை வளர்த்தெடுப்பது; குறைந்த அளவு கார்பன் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பது ஆகியவற்றின் மூலம் திட்டங்கள், நடைமுறைத் திட்டங்கள் ஆகியவற்றையும் நீண்ட கால எரிசக்தி மேம்பாட்டையும் உயர்த்துவதற்கென இருதரப்பும் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட செயல்பாட்டிற்கு வசதி செய்து தருவதற்கென இந்தியாவைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், கொள்கை ஆய்வாளர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகள் அமெரிக்க எரிசக்தித் துறையின் தேசிய பரிசோதனைச் சாலை, இது தொடர்பான அமெரிக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். முன்மாதிரி சமூகத்திற்கான ஒரு வலைப்பின்னலை உருவாக்கவும் அரசுடனான பகுப்பாய்வு வேலைகள் மற்றும் கொள்கை உருவாக்க நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கென சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவி அமைப்பு மற்றும் இந்தியாவின் நிதிஆயோக் ஆகியவை இந்திய எரிசக்தி முன்மாதிரி மன்றத்தைக் கூட்டாகத் தொடங்கியுள்ளன.

மின்சக்தித் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பது

எரிசக்தித் துறையில் எதிர்காலத்தில் சிக்கலான எரிசக்தி சவால்களை எதிர் கொள்ளவும் புதுமையை ஆதரிப்பதற்கான பல்வேறு வகையான திறன்களையும் கொண்ட மேலும் சமநிலையான ஊழியர்களுக்கான தேவையை உணர்ந்துள்ள நிலையில் கேந்திர ரீதியான எரிசக்திக்கான கூட்டணியின் மூலம் பாலின பன்முகத்தன்மை, பாலின பொதுநீரோட்டம், எரிசக்தித்துறை முழுவதிலும் பெண்களிடையே தொழில்முனைவுத் திறனை வளர்த்தெடுப்பது ஆகியவற்றில் தாங்கள் உறுதிப்பாட்டோடு உள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். எரிசக்தி துறையில் கவனம் செலுத்தும் வகையிலும், தொழில்நுட்ப ரீதியான தூண்களின் ஊடாக பாலின முனைப்பிலான நடவடிக்கைகளை உள்ளடக்கும் நோக்கத்துடன்  எரிசக்தித் துறையிலும் அதன் பக்கங்களிலும் செயல்படுவதற்கென தெற்காசிய பெண்கள் என்ற அமைப்பையும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவி அமைப்பு தொடங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத் தூண்கள் வழியாக ஒத்துழைப்பிற்கான நடவடிக்கைத் திட்டங்களை மேலும் வளர்த்தெடுப்பதற்கென கேந்திர ரீதியான எரிசக்தி கூட்டணிக் குழுக்கள் விரைவில் கூடவிருக்கின்றன. இந்தக் கூட்டணியின் அமைச்சர் அளவிலான அடுத்த கூட்டம் 2021ஆம் ஆண்டில் நடைபெறும்.

*****(Release ID: 1639745) Visitor Counter : 60