ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மகாராஷ்டிராவுக்கு 1 ஜுலை முதல் 16 ஜுலை வரையிலான காரீஃப் பருவ காலகட்டத்துக்குத் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 8.83 லட்சம் மெட்ரிக்.டன் என்ற அளவைத் தாண்டி 11.96 லட்சம் மெட்ரிக்.டன் யூரியா கிடைக்கின்றது.

Posted On: 17 JUL 2020 4:59PM by PIB Chennai

விதைப்புக்காலத்திற்கு முன்னரே தங்களுக்கு எவ்வளவு உரம் தேவை என்று மாநிலங்கள் தெரிவித்துள்ளனவோ அந்த அளவு உரங்களை சரியான நேரத்திலும் போதுமான அளவிலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பதை இந்திய அரசின் உரங்கள் துறை உறுதி செய்கிறது

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஒட்டுமொத்த காரீஃப் பருவத்திற்கான (1 ஏப்ரல் முதல் 20 செப்டம்பர் வரை) தேவை 15 லட்சம் மெட்ரிக் டன் யூரியா என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விநியோகத் திட்டத்தின்படி உரங்களை கட்டாயமாக விநியோகிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் உரவிநியோகத்தை தினமும் உரங்கள் அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.   நாட்டின் எந்தப் பகுதியிலாவது உரங்கள் உடனடியாகத் தேவை என்ற நிலை ஏற்பட்டால், உரங்கள் துறையானது உடனடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது..

1 ஏப்ரல் முதல் 16 ஜுலை வரை யூரியாவின் தேவை 8.8 லட்சம் மெ.டன் ஆகும்.  தொடக்க இருப்பான 4.02 லட்சம் மெட்ரிக்.டன் உரத்தையும் சேர்த்து மொத்தமாக 11.96 லட்சம் மெட்ரிக்.டன் யூரியா கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் யூரியாவின் நேரடிப் பணப்பரிமாற்றப் பயன் (DBT) விற்பனை 9.57 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கிறது.  கடந்த ஆண்டின் இதே காலப்பிரிவில் யூரியாவின் நேரடிப் பணப்பரிமாற்றப் பயன் விற்பனை 4.70 மெ.டன்னாக இருந்தது.  இந்தப் பருவத்தில் எதிர்பாராத நிலையில் விற்பனை அதிகரித்திருந்தாலும் கூட தட்டுப்பாடு இல்லாமல் போதுமான அளவில் யூரியா கிடைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய ஜுலை மாதத்தில் 3.15 லட்சம் மெட்ரிக்.டன் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதையும் தாண்டி உரங்கள் துறை 4.34 லட்சம் மெட்ரிக்.டன் (தொடக்க இருப்பு 2.70 லட்சம் மெட்ரிக்.டன் இதில் அடங்கும்) யூரியா கிடைக்க ஏற்பாடு செய்து.ள்ளது.  16-7-2020 அன்றுள்ள நிலவரப்படி முடிவு இருப்பான 2.38 லட்சம் மெட்ரிக்.டன் யூரியா நடப்பு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும்.  ஏற்கனவே இந்தக் காலகட்டத்திற்கான தேவையாக 1.52 லட்சம் மெட்ரிக்.டன் தான் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  ஏற்றுக் கொள்ளப்பட்ட விநியோகத் திட்டத்தின்படியே யூரியா விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

************



(Release ID: 1639453) Visitor Counter : 151