எரிசக்தி அமைச்சகம்

இந்தியாவில் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்த என்டிபிசி மற்றும் என்ஐஐஎஃப் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 16 JUL 2020 5:23PM by PIB Chennai

மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமும், மிகப் பெரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமுமான தேசிய அனல் மின்சக்தி கழகம் (என்டிபிசி), தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்துடன் (என்ஐஐஎஃப்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இந்தியாவில், புதுப்பிக்கப்படும் எரிசக்தி, மின் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை விரிவாக்கவும், இருதரப்பு நலன் சார்ந்த பிற துறைகளில் செயல்படவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

என்டிபிசியின் பொது மேலாளர் திருமதி. சங்கீதா கவுசிக், என்ஐஐஎஃப்எல்-ன் செயல் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு.ராஜீவ் தர் ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

                                                                                                        ******


 


(रिलीज़ आईडी: 1639266) आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu