திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் இந்தியா இயக்கத்தின் 5ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக இளைஞர் திறன் தினம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் டிஜிட்டல் மாநாடு

Posted On: 15 JUL 2020 5:43PM by PIB Chennai

திறன் இந்தியா இயக்கத்தின் 5ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக இளைஞர் திறன் தினம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இன்று புது தில்லியில் டிஜிட்டல் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்த மாநாட்டிற்கு பிரதமர் அனுப்பியுள்ள செய்தியில், விரைவாக மாறிவரும் வர்த்தக மற்றும் சந்தை சூழலுக்கு ஏற்ப இளைஞர்கள் திறன் பெற்று , மீள் திறன் பெற்று, திறன் மேம்பாடு செய்துகொண்டே வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். திறன் தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், அனைத்து சமயங்களிலும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளும் திறன் பெற்றிருப்பதால் உலகம் இளைஞர்களுடையது என்று கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தொடங்கப் பட்ட திறன் இந்தியா திட்டம் காரணமாக பெரிய அளவிலான திறன் வளர்ச்சி, மீள்திறன் வளர்ச்சி, திறன் மேம்படுத்திக்கொள்வதில் வளர்ச்சி ஆகியவற்றுக்கான விரிவான கட்டுமான வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன என்றும் இதனால், உள்ளூர் நிலையிலும் சர்வ தேச அளவிலும் வேலை வாய்ப்பு வசதிகள் அதிகரித்துள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் முழு செய்தி வாசகத்திற்கு கீழ் கண்ட வலைத்தளத்தைப் பார்க்கவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1638998
நிகழ்ச்சியில் பேசிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் துறை அமைச்சர் திரு மகேந்திரநாத் பாண்டே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டில் இளைஞர்கள் முக்கியமான சக்தி என்றும் அவர்களே நாட்டின் மிகப் பெரிய சொத்து என்றும் கூறினார். தேசிய அளவிலும் சர்வ தேச அளவிலும் ஏற்பட்டுவரும் தேவைகளைச் சந்திக்க தம்மை தகுதியானவர்களாக்கிக் கொள்ளும் வகையில் புதிய தொழில் நுட்பங்கள் அவர்களுக்கு உதவியாக உள்ளன என்றார்.

டிஜிட்டல் மாநாட்டில், மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்க கூடிய எரிசக்தி (தனிப்பொறுப்பு), மற்றும் திறன் மேம்பாடு & தொழில் முனைவுத் திறன் துறை இணை அமைச்சர் திரு ஆர். கே. சிங் உரையாற்றினார். நிகழ்ச்சியில் யூனியன் பிரதேசமான லே-யில் ஒன்றும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஒன்றுமாக மத்திய பொதுப் பயிற்சி துறையின் இரண்டு மண்டல அலுவலகங்கள் மின்னணு அமைப்பு மூலம் திறந்து வைக்கப்பட்டன.
 

*****(Release ID: 1639049) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi , Telugu