சுற்றுலா அமைச்சகம்

“நாடிஅறிவியல் :முதுகெலும்புக் கோளாறுகளுக்கான முழுமையான தீர்வு” என்ற தலைப்பில் பாருங்கள் நமது தேசம் என்ற தொடரின் 41ஆவது இணையவழிக் கருத்தரங்கை மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது.

Posted On: 13 JUL 2020 6:02PM by PIB Chennai

உடல்நல அறிவியலின் பண்டைய வடிவமான நாடி அறிவியல் குறித்தும் முதுகெலும்புக் கோளாறுகள் பலவற்றுக்கு அது அளிக்கும் நல்ல பலன்கள் குறித்தும் எடுத்துக் கூறும் வகையில், “நாடி அறிவியல் முதுகெலும்புக் கோளாறுகளுக்கான முழுமையான தீர்வு என்ற தலைப்பில் பாருங்கள் நமது தேசம் - கருத்தரங்குத் தொடரின் வரிசையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் இணையவழிக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு நாட்டின் பண்டைய, பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகள் சுற்றுலாத் துறையில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் எடுத்துக்கூறும் வகையில், இந்த இணைய வழிக்கருத்தரங்கு நடைபெற்றது. பல்வேறு சுற்றுலாத் தலங்களில் இந்தியா, வியத்தகு சுற்றுலாத்மாக உள்ளது என்பதை நாடி அறிவியல் என்ற இந்தப் பாரம்பரிய, பண்டைய உடல்நல மருத்துவ சிகிச்சை முறை, சிறப்பான முறையில் எடுத்துக் கூறுகிறது.

 

பாருங்கள் நமது தேசம் என்ற இணைய வழிக்கருத்தரங்கின் 41ஆவது தொடர் 11 ஜூலை 2020 அன்று நடைபெற்றது. மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குர் திருமிகு. ரூபிந்தர்பிரார் நெறிப்படுத்தினார். உத்தராகண்ட் சமஸ்கிருதப் பல்கலைகழகத்தில் யோகா அறிவியல் துறையை தோற்றுவித்தவரும், அத்துறையின் தலைவரும், மாணவர் நலனின் டீனுமான டாக்டர்.லக்ஷ்மிநாராயணன் ஜோஷி கருத்தரங்கை வழங்கினார். இத்துறையின் உதவிப்பேராசிரியரும் சிம்லாவில் உள்ள இமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தின் ஐ சி டி இ ஓ எல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர்.அர்பிதாநேகி இணைந்து வழங்கினார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் கீழ் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் முயற்சியாக மெய்நிகர்த்தளங்கள் மூலமாக தொடர்முயற்சியாக இது போன்று கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

 

யோகா அறிவியல் - நாடி அறிவியல் என்பதன் பொருள் குறித்து கருத்தரங்கின் துவக்கத்தில் டாக்டர். லக்ஷ்மி நாராயண் ஜோஷி எடுத்துரைத்தார். ஆயுர்வேதத்தின் படி மனித உடம்பில் மூன்று நிலைகள் உள்ளன. வாதம் (காற்று + ஈதர்ஆகாயம்) பித்தம் (நெருப்பு+ நீர்) கபம் (பூமி+ நீர்)

 

இந்த மூன்று கூறுகளின் நிலைகளில் ஏற்படும் சமனற்ற தன்மை உடலின் பல்வேறு கோளாறுகளுக்குக் காரணமாகிறது என்பதை டாக்டர்.லட்சுமி நாராயண் விளக்கினார். வாதம் தொடர்பான சமனற்ற நிலைகளின் காரணமாக மனித உடலில் 80 வகையான கோளாறுகள் வரை ஏற்படலாம். அதே போல் பித்தம் தொடர்பான சமனற்ற நிலைகளின் காரணமாக 40 வகையான கோளாறுகள் ஏற்படலாம். கபம் தொடர்பான சமனற்ற நிலைகள் காரணமாக மனித உடலில் 20 வகையான கோளாறுகள் ஏற்படலாம்.

 

நாடி பரிக்ஷன் நாடி பரிசோதனை மூலம் உடலில் ஏற்படும் கோளாறுகள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று கூறுகளில் எவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்று கண்டறிய முடியும். நமது உடலில் 72000 நாடிகள் உள்ளன. இந்த 72,000 நாடிகளும் மூன்று அடிப்படை நாடிகளிலிருந்து தோன்றுபவையாகும்.(இடம் பிங்கலம் ஷுசும்னா) இடம்,ம், மையம்

 

யோகாசனம் செய்வதால் உடலுக்குள் உள்ள நாடிகளுக்குள், க்தி தடையின்றி செல்கிறது. இதனால் அவை தூய்மை அடைகின்றன நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. யோகாவைப் பொறுத்தவரை சில ஆசனங்கள் செய்வதால், குறிப்பிட்ட சில நாடிகளின் வழியாக ரத்தம் தடையின்றிச் செல்வதை நம்மால் பராமரிக்கமுடியும். மகராசனம் (முதலை போன்ற வடிவத்திலான ஆசனம்) புஜங்காசனம் (பாம்பு வடிவத்திலான ஆசனம்) சவாசனம், புஜங்கசவாசனம் (புஜங்காசனம் சவாசனம் ஆகியவற்றின் தொகுப்பு) போன்ற பல்வேறு ஆசனங்கள் செய்வதால் முதுகெலும்புக் கோளாறுகளும், பிரச்சினைகளும் வராமல் இருக்கும்.

 

அடுத்த இணையவழிக் கருத்தரங்கு 18 ஜூலை, 2020 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகேஷ்வர் நகர கலாச்சாரம் பற்றி நடைபெறும். இணைந்திருங்கள்



(Release ID: 1638381) Visitor Counter : 219