எரிசக்தி அமைச்சகம்

என்டிபிசி சிங்கராலி தனது அபார செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

Posted On: 11 JUL 2020 2:29PM by PIB Chennai

இந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமும், மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமுமான  தேசிய அனல் மின்கழகம் என்டிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டிலேயே சிறப்பாக செயல்பட்ட அலகாக, என்டிபிசியின் சிங்கராலி முதல் அலகு உருவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. என்டிபிசி சிங்கராலி மிகப்பழமையான, என்டிபிசியின் முதன்மையான மின் உற்பத்தி அலகாகும்.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் முதல் அலகு 1982-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி உற்பத்தியைத் தொடங்கியது. மேம்பட்ட திறனுடன் அது தொடர்ந்து இயங்கி வருகிறது.

 

என்டிபிசி நிறுவனத்தின் தகவல் படி, என்டிபிசி சிங்கராலி ஒவ்வொன்றும் 200 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து அலகுகளையும், தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளையும் கொண்ட மொத்தம் 2000 மெகாவாட் நிறுவு திறன் கொண்டதாகும். தலா 200 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகுகள் (1, 4&5) முறையே 101.96%, 101.85%, 100.35%  என்ற பிஎல்எப்- நாட்டிலுள்ள நிலக்கரி மூலமான அலகுகளில், 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் எட்டியுள்ளது.

மொத்தம் 62110 மெகாவாட் நிறுவு திறனுடன், என்டிபிசி குழுமம் 70 மின்நிலையங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 24 நிலக்கரி அடிப்படையிலானவை, 7 சைக்கிள் வாயு/திரவ எரிபொருள், 1 நீர் மின் நிலையம், 13 புதுப்பிக்கத்தக்கவை ஆகியவற்றுடன் 25 துணை மற்றும் கூட்டுமுயற்சி மின்நிலையங்களும் அடங்கும்.

 

***



(Release ID: 1637992) Visitor Counter : 150