ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராட, ராஷ்டிரியா கெமிக்கல்ஸ் & ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் ஒரு புதிய தயாரிப்பைக் கொண்டு வருகிறது: ஐசோ புரோபில் ஆல்கஹால் (IPA) அடிப்படையிலான கை சுத்தப்படுத்தும் ஜெல்

Posted On: 11 JUL 2020 1:26PM by PIB Chennai

கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சியில் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் RCF SAFEROLA என்ற ஒரு கை சுத்திகரிப்பு IPA ஜெல்லை அறிமுகப்படுத்தியுள்ளது

http://pibcms.nic.in/WriteReadData/userfiles/image/cfp0EQD.jpg

ராஸ்ட்ரியா ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தின் கூற்றுப்படி, கைகளைச் சுத்தப்படுத்தும் இந்த ஜெல் என்பது தோலின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் தோலின் உற்ற தோழன் என்ற அடிப்படையிலான கை-சுத்திகரிப்பு ஆகும், இதில் ஐசோ புரோபில் ஆல்கஹால் (IPA) மற்றும் கற்றாழையின் சாறு உள்ளது. இது வைட்டமின்-இ உடன் செறிவூட்டப்பட்டுள்ளதுடன் எலுமிச்சையின் புத்துணர்வு வாசனை கொண்டது.

ராஸ்திரியா ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனம்  (RCF) கை சுத்தப்படுத்தும் இந்த ஜெல்லை எளிதில் கீழே கொட்டாத 50 மில்லி மற்றும் 100 மில்லி பாட்டில்களாக வெளியிடுகிறது. ஒரு பாட்டில் விலை முறையே ரூ. 25/ - மற்றும் ரூ. 50/ - என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்புக்காக நிறுவனம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலை இதுவாகும். RCF நாடு முழுவதும் உள்ள தனது விநியோகக் கட்டமைப்பு மூலம் இந்தத் தயாரிப்பை சந்தைப்படுத்த முன் வந்துள்ளது.

தற்போதைய கோவிட் – 19 நோய்த் தொற்றின் பரவல், கை சுத்திகரிப்பாளர்களுக்கான சந்தைத் தேவை ஆகியவற்றை அடுத்து, RCF பாதுகாப்பான மற்றும் நியாயமான விலையுள்ள கிருமி நாசினியை, தற்போதைய தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறிய பங்களிப்பாக வழங்கியுள்ளது.

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. எஸ். சி .முட்கரிகர், RCF-இன் கை சுத்தப்படுத்தும் IPA ஜெல்லான- ‘‘RCF SAFEROLA” வை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், தற்போதைய தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் RCF - இன் இந்தத் தயாரிப்பு சிறிய பங்களிப்பாகும் என்றும் தெரிவித்தார்.

RCF என்ற "மினி ரத்னா", நாட்டில் உரங்கள் மற்றும் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இது யூரியா, கலப்பு உரங்கள், உயிர் உரங்கள், நுண் ஊட்டச்சத்துக்கள், நீரில் கரையக்கூடிய உரங்கள், மண் பதப்படுத்தும் உரங்கள் மற்றும் பரந்த அளவிலான தொழில்துறை இரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் கிராமப்புற இந்தியாவில் "உஜ்ஜ்வாலா" (யூரியா) மற்றும் "சுபாலா" (கூட்டு உரங்கள்) என்ற வணிகப் பெயருடன் அதிக சமூக மதிப்பைக் கொண்டுள்ளது. உர தயாரிப்புகளைத் தவிர, சாயங்கள், கரைப்பான்கள், தோல் தயாரித்தல், மருந்துகள் மற்றும் பிற தொழில்துறை தயாரிப்புகளின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான தொழில்துறை இரசாயனங்களையும் RCF தயாரிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

*****



(Release ID: 1637979) Visitor Counter : 251