எரிசக்தி அமைச்சகம்

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் யூனிட்களை பொருத்துவதற்காக இஇஎஸ்எல், நொய்டா ஆணையகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து

Posted On: 09 JUL 2020 6:24PM by PIB Chennai

மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்கவும், பொது இடங்களில் இந்த வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் மற்றும் இது தொடர்பான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குமான ஒப்பந்தம் ஒன்றில் மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனர்ஜி எஃபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட் பொதுத்துறை நிறுவனம், நியூ ஓக்லா தொழில் வளர்ச்சி ஆணையகத்துடன் (நொய்டா) கையெழுத்திட்டுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று முடக்க நிலைக்கு பிறகான காலகட்டத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு இசைவான உள்கட்டமைப்பு சூழலை உருவாக்குவதற்கு இந்த கூட்டிணைப்பு வழிவகுக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் நொய்டா ஆணையகத்தின் பொது மேலாளர் திரு.ஏ.கே.தியாகி, இஇஎஸ்எல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு.அமீத் கௌசிக் ஆகியோர் நொய்டா ஆணையகத்தின் தலைமை செயல் அதிகாரி திருமதி.ரித்து மகேஸ்வரி முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1637584

*****(Release ID: 1637698) Visitor Counter : 103