நிதி அமைச்சகம்

மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கும், இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUL 2020 6:40PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கும், இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியத்திற்கும் (செபி) இடையே, தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கான முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் முதன்மை தலைமை இயக்குனர் (தகவல் தொழில்நுட்பம்) திருமதி.அனு ஜே.சிங், செபியின் முழுநேர உறுப்பினர் திருமதி. மாதபி பூரி புச் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே தரவுகளையும், தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1637510) வருகையாளர் எண்ணிக்கை : 306
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi