சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கட்டணங்கள் பற்றிய அறிவிப்புகளை e- அலுவலகம் மூலமாக வெளியிடுவதற்கும், அவற்றுக்கான சரிபார்ப்புப்பட்டியலைப் பூர்த்தி செய்வதைக் கட்டாயமாக்குவதற்கும் உரிய வழிமுறைகள் பற்றிய நிலையான இயக்க வழிமுறைகளை (SOP) சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது

Posted On: 08 JUL 2020 4:59PM by PIB Chennai

கட்டணங்கள் பற்றிய அறிவிப்புகளை e- அலுவலகம் மூலமாக வெளியிடுவதற்கும், அவற்றுக்கான சரிபார்ப்புப் பட்டியலை பூர்த்தி செய்வதை கட்டாயமாக்குவதற்கும், உரிய வழிமுறைகள் பற்றிய நிலையான இயக்க வழிமுறைகளை (SOP), சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த எஸ் ஓ பி உடனடியாக அமலுக்கு வருகிறது பி ஓ டி, ஈபிசி (BOT and EPC) ஆகிய திட்டங்களின் கீழ், பயனாளி கட்ட அறிவிப்புகளுக்கான மாதிரிப் படிவம் இதில் வழங்கப்பட்டுள்ளது.

கட்டண முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான சீரான வடிவமைப்பை நிலைநாட்டுவதே இதன் நோக்கமாகும். இந்த அமைச்சகத்தின் கட்டணப்பிரிவு கட்டண அறிவிக்கைகளுக்கான மிக முக்கியமான விவரங்கள் அனைத்தையும் கொண்ட சரிபார்ப்புப் பட்டியல் ஒன்றை e- அலுவலகத்துடன் இணைக்கத் தக்க வகையில் உருவாக்கியுள்ளது. e- அலுவலகம் மூலமாக சமர்ப்பிக்கப்படும் அனைத்து முன்மொழிவுகளும், பூர்த்தி செய்யப்பட்ட சரிபார்ப்புப் பட்டியலுடன், கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். முழுமையான விவரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக திட்டங்களில் தாமதம் ஏற்படுவதை இதனால் குறைக்க முடியும். டோல் கட்டண அறிவிக்கைகள் வெளியிடப்படுவதை விரைவுபடுத்தவும் இது உதவும்.

                                                                                         *********



(Release ID: 1637486) Visitor Counter : 137