அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
லித்தியம் தொடர்பான ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு
Posted On:
07 JUL 2020 12:52PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இந்திய விண்வெளி இயற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், லி்த்தியம் தொடர்பான தமது புதிய கண்டுபிடிப்புகளை நேச்சர் அஸ்ட்ரானமி பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள். சர்வதேச ஆய்வாளர்களுடன் இணைந்து, அவர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக சூரியனைப் போன்ற நட்சத்திரங்களில் லித்திய உற்பத்தி இருப்பதற்கான சான்று இருப்பதாக முதன் முறையாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் ஈஸ்வர் ரெட்டி, இந்த கண்டுபிடிப்பு நட்சத்திரங்கள் லித்தியத்தை அழித்து விடும் என்ற நீண்டகால கருத்தினை மாற்றியமைத்திருக்கிறது என்றும் வருங்காலத்தில் சூரியனில் கூட லித்தியம் உற்பத்தி செய்யப்படலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1636949
(Release ID: 1636967)