நிதி அமைச்சகம்

இரண்டு வருவாய் வாரியங்கள் இணைப்பு என்று வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது

Posted On: 06 JUL 2020 4:34PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் வாரியத்தையும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தையும் இணைக்கும் திட்டத்தை அரசு பரிசீலிப்பதாக முன்னணி செய்தித்தாள் ஒன்றில் இன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய வருவாய் வாரியங்கள் சட்டம், 1963-இன் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இரு வாரியங்களை இணைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்பதால் இந்த செய்தி உண்மைக்கு மாறானதாகும். பகுதிவாரியான அதிகார வரம்பில் கைப்பட செய்யப்பட்ட மதிப்பீட்டில் இருந்து முழுக்க மின்னணு சார்ந்த முகம் தேவைப்படாத மதிப்பீட்டுக்கு மாறுதல், மின்னணு சரிபார்த்தல் அல்லது பரிவர்த்தனைகள் மற்றும் முகம் தேவைப்படாத மேல் முறையீடுகள் என பெரிய அளவில் வரிசெலுத்துவோருக்குத் தோழமையான சீர்த்திருத்தங்களை நிதி அமைச்சகம் செய்து வரும் வேளையில், அமைச்சகத்தின் உரிய அதிகாரிகளிடம் உண்மைகளை சரிபார்த்துக் கொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தி கொள்கை கவனச்சிதறலையே ஏற்படுத்துகிறது.

 

அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தபடி, இணைப்புப் என்பது வரி நிர்வாக சீர்த்திருத்தங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றாகும். ஆணையத்தின் அறிக்கையை விரிவாகப் பரிசீலனை செய்த அரசு, இந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை. பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அரசு கொடுத்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக, அரசு வாக்குறுதிகள் குழுவின் முன்னும் 2018-இல் இந்த உண்மையை அரசு சமர்ப்பித்தது. வருவாய்த் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள  வரி நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் மீதான அறிக்கையும் இந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை எனத் தெளிவாகக் காட்டுகிறது

 

பொதுத்தளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ கோப்புகளைக் கூட முறையாக சரி பார்க்காமல், நிதி அமைச்சகத்தின் உரிய அதிகாரிகளிடம் தற்போதைய நிலையைப் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளாமல் உண்மைக்கு மாறான இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதழியல் தரத்தை இது மிகவும் தாழ்ந்து பிரதிபலிப்பதோடு, உண்மைகளை சரிபார்த்தல் மீதான முழு புறக்கணிப்பையே இது வெளிக்காட்டுகிறது. முதல் பக்கத் தலைப்புச் செய்தி அளவில் இப்படிப்பட்ட ஒரு சரிபார்க்கப்படாத கட்டுரை வெளியிடப்படப்பட்டிருக்கும் பட்சத்தில், செய்தி வாசிக்கும் அனைத்து பொது மக்களுக்கும் இது கவலையளிப்பதாகும். அடிப்படையற்றது மற்றும் சரிபார்க்கப்படாதது என்று இந்த செய்தி முழுவதுமாக நிராகரிக்கப்படுகிறது.

 

***
 



(Release ID: 1636872) Visitor Counter : 223