அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பேராசிரியர் கே.விஜயராகவன் : “கட்டுப்பாட்டு நடைமுறைகளை மாற்றியமைப்பதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஊக்குவிக்க ஏதுவாக பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு விதிமுறைகளையும் விரிவுபடுத்த வேண்டும்.“

Posted On: 05 JUL 2020 3:15PM by PIB Chennai

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு கொள்கை2020- உருவாக்குவதற்காக இரண்டு நாட்கள் நடைபெற்ற வட்டமேஜை ஆலோசனைக் கூட்டத்தில்இந்தியத் தொழில் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள முன்னணித் தொழிலதிபர்கள் சுமார் 30 பேர் பங்கேற்று, சமூகப் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விவாதித்தனர்.   தொழில் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்குமிடையே  அதிக ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்திய தொழிலதிபர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான முதலீட்டையும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் குறிப்பிட்ட சதவீத அளவிற்கு அதிகரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக் கொள்கை 2020- உருவாக்குவதற்கான, உயர்மட்ட த் தொழில்துறையினருடனான வட்டமேஜை ஆலோசனைக் கூட்டத்தின் 2-வது நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற  மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜய்ராகவன், மத்திய அறிவியல்-தொழில்நுட்பத்துறைச் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா ஆகியோர், தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில்அதிக சலுகைகள் மற்றும் உரிய அங்கீகாரம் தேவை என்று குறிப்பிட்டனர்.  

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கக் கூடிய , விரிவான நீண்ட காலக் கொள்கை தேவை என்று வலியுறுத்திய பேராசிரியர் அசுதோஷ் சர்மா, அறிவாற்றல் மிக்கவர்களைஅந்த அறிவாற்றலைப் பயன்படுத்துவோருடன் இணைப்பதற்கான நடைமுறைகளை அடையாளம் காண்பதும் அவசியம் என்றார்

அதிக அளவிலான சமூகபொருளாதார நலனுக்கான தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியபரவலாக்கப்பட்ட, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையிலான மற்றும் உள்ளடக்கிய வடிவமைப்பு நடவடிக்கைகள், முன்னுரிமைகளை மறு வரையறை செய்யும் நோக்கிலும், துறைவாரியான சிறப்புக் கவனம் செலுத்துதல் மற்றும் ஆராய்ச்சி முறைகள் அடங்கிய, புதிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக் கொள்கையை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட, முதலாவது உயர்மட்டத் தொழில்துறை ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.                                                                              

 

 

*****

 



(Release ID: 1636663) Visitor Counter : 142