ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் இயக்கம் : ஊரடங்கின் போது, 19 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன

Posted On: 02 JUL 2020 6:35PM by PIB Chennai

குழாய் இணைப்புகள் மூலம் அவரவர் வீட்டில் ‘நீர் விநியோகம்’ என்பது பெண்களின் விருப்பமாகும். அது அவர்களுக்கு கண்ணியத்தைத் தருகிறது. அது அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு உத்திரவாதத்தைத் தருகிறது. இது அவர்களின் ‘எளிமையான வாழ்க்கையை’ மேம்படுத்துவதுடன், சிறந்த ‘வாழ்க்கைத் தரத்தை’ உறுதி செய்கிறது. இந்த உயர்ந்த லட்சியங்களை மனதில் கொண்டு, பிரதமர் 73 வது சுதந்திர தினத்தில், அதாவது ஆகஸ்ட் 15, 2019ல் செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஜல் ஜீவன் இயக்கத்தைத் (JJM) தொடங்கினார். இந்தப் பணி மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து கூட்டாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் “ ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர்”  என்பதே. அதன்படி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்பு வழங்கப்பட வேண்டும். 2019-20 ஆம் ஆண்டில், 7 மாதங்களில், 84 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன.

2024 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் செயல்படும் வீட்டு குழாய் இணைப்புகளை (FHTCs) வழங்குவதையும், அதன் மூலம் போதுமான அளவு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதையும் ஜல் ஜீவன் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது, அதாவது நீண்ட கால மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தரத்தில்  55 lpcd (ஒரு நாளைக்கு தனிநபருக்கு லிட்டர் நீர்) என்ற அடிப்படையில் வழங்குவதாகும். இந்தத் திட்டம் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் பயனளிக்கும்.

நடப்பு ஆண்டில், ஜல் ஜீவன் மிஷனை செயல்படுத்த மாநிலங்களுக்கு இதுவரை ரூ8,050 கோடி மத்திய நிதி கிடைத்துள்ளது. 2020-21-டன் முதல் காலாண்டில், நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 19 லட்சம் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக மோசமான நிலைமைகள் இருந்தபோதிலும் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

********



(Release ID: 1636124) Visitor Counter : 796