பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
இந்திய பழங்குடியினரின் விற்பனை நிலையம் இன்று பிரயாகராஜ் விமான நிலையத்தில் திறக்கப்படுகிறது
இந்திய பழங்குடியினர் விற்பனை செய்யும் சில்லறை வலையமைப்பை நாடு முழுவதும் 121 விற்பனை நிலையங்களுக்கு விரிவுபடுத்துகிறது
Posted On:
01 JUL 2020 8:14PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சகத்தின் கீழ், இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (TRIFED) இந்திய பழங்குடியினரின் விற்பனை நிலையம் இன்று பிரயாகராஜ் விமான நிலையத்தில் திறக்கப்பட்டது. பிரயாகராஜ் விமான நிலையத்தில் உள்ள இந்திய பழங்குடியினர் விற்பனை நிலையம் பிரயாகராஜ் நகரில் இரண்டாவது இடமாகவும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 வது இடமாகவும் உள்ளது. ட்ரைபெஃட் நிறுவனத்தின் இயக்குநர் திரு. பிரவீர் கிருஷ்ணா காணொலிக்காட்சி மூலம் இதை திறந்து வைத்தார். இந்திய விமான நிலைய ஆணையத்துடன் (ஏஏஐ) இணைந்து, சென்னை, ஜெய்ப்பூர், உதய்பூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், அகமதாபாத், புனே, கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் 9 இந்திய பழங்குடியினரின் விற்பனை நிலையங்களை ட்ரைபெஃட் அமைத்துள்ளது. பிரயாகராஜ் விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட கடை இதுபோன்ற 10 வது விற்பனை நிலையம் (விமான நிலையங்களில்) ஆகும். இத்துடன் நாடு முழுவதும் 121 விற்பனை நிலையங்கள் உள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. பிரவீர் கிருஷ்ணா, இந்த மைல்கல்லை எட்டிய குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் - இந்த கடை 2020 மே மாதம் ஒதுக்கப்பட்டது என்றும், வெறும் 15 நாட்களில் பணிகள் முடிந்து விற்பனைக்கு தயாராக வந்துள்ளது! அதற்கு உறுதுணையாக இருந்த குழுவினரின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பாராட்டிய அவர், இந்த திட்டத்தை நிறைவு செய்வதில் தனது ஒத்துழைப்பு மற்றும் முன்முயற்சிக்கு ஏஏஐ-வின் பிராந்திய இயக்குநர் திரு. சுனில் யாதவுக்கு நன்றி தெரிவித்தார். அதுமட்டுமன்றி மற்ற பிராந்தியங்களில் உள்ள ட்ரைபெஃட் செயல் வீரர்களை இதை ஒரு உதாரணமாகப் பயன்படுத்த ஊக்குவித்தார், மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசுக்கு சொந்தமான அனைத்து விமான நிலையங்களிலும் இந்திய பழங்குடியனரின் விற்பனை நிலையம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அந்தந்த பிராந்தியங்களில் உள்ள அனைத்து சப்ளையர்கள் மற்றும் கைவினைஞர்களைத் தொடர்புகொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி முன்வரிசைக்கு வரச் செய்வதுடன், தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளின் வர்த்தகப் பலனைப் பெற முயற்சி மேற்கொள்ளுமாறு ட்ரைபெஃட்டின் செயல் வீர்ர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சவாலான சூழ்நிலைகளில் கூட."உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்" என்ற பிரதமரின் செய்தியை முன்னெடுத்து, பழங்குடி கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை சந்தைப்படுத்தல் மூலம் ஊக்குவிப்பதன் மூலம், ட்ரைபெஃட் தனது சில்லறை விற்பனை நடவடிக்கைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துகிறது. தொற்றுநோயால் ஏற்பட்ட முன்னொப்போதுமில்லாத நெருக்கடியைத் தணிக்கவும், 100 கோடிக்கு மேல் மதிப்புள்ள பழங்குடி கைவினைஞர்களின் விற்கப்படாமல் உள்ள பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வரவும், வீட்டுலிருந்தே வேலை செய்யும் தொழிலாளர்கள் வெளிவரவும் மற்றும் பழங்குடி கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும், பழங்குடி விவகார அமைச்சகத்தின் TRIFED பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி கைவினைஞர்கள் நேரடியாக இணைய தளத்தில் பதிவு செய்யப்படுவார்கள், இதன் மூலம் அவர்களின் கையால் தயாரிக்கப்பட்ட அழகான பொருட்களை விற்பனை செய்வதற்காக, இன்னும் அதிகமான பார்வையாளர்களை அடைய முடியும்.
இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த ட்ரைபெஃட் தனது விரிவான சில்லறை விற்பனை நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விற்பனை வருமானத்தில் 100% பழங்குடி கைவினைஞர்களுக்கு மாற்றவும் முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் பொருட்கள் பெறுவதை முடிந்தவரை தடையின்றி செய்ய, TRIBES இந்தியாவின் பிராந்திய அலுவலகங்களும் தயாரிப்புகளை வீட்டுக்கு வீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இ-காமர்ஸ் இயங்குதளங்களை மேம்படுத்துவதற்கு இந்திய பழங்குடியினரின் தயாரிப்புகள் www.tribesindia.com இல் கிடைக்கச் செய்துள்ளன, அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், பேடிஎம் மற்றும் ஜீஎம் உள்ளிட்ட மின்வணிக தளங்களில் அனைத்து வகையான பொருட்களும் எளிதில் கிடைப்பதை உறுதிப்படுத்த அனைத்து பிராந்தியங்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. அனைத்து தயாரிப்புகளுக்கும் 70% தள்ளுபடி விலையில் சில்லறை கடைகளிலும், இ-காமர்ஸ் தளங்களில் உள்ள TRIBES INDIA கடையிலும் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ட்ரைபெஃட் தொடர்ந்து தீவிரமாக செயல்படுகிறது.
*****
(Release ID: 1635861)