உள்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் நெய்வேலி மின் உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வேதனை
தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமியுடன் பேசி, சாத்தியமான அனைத்து உதவிகளும் அளிப்பதாக உறுதி
நிவாரணப் பணிகளுக்கு உதவ மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளது
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த திரு அமித் ஷா, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்
प्रविष्टि तिथि:
01 JUL 2020 2:52PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நெய்வேலி மின்உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசிய திரு அமித் ஷா, சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்தார்.
நிவாரணப் பணிகளுக்கு உதவ, ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, விபத்தினால் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
(रिलीज़ आईडी: 1635649)
आगंतुक पटल : 180