நிதி அமைச்சகம்

சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரகம் (தலைமையகம்) பதிவு செய்யப்படாத பான் மசாலா / குட்கா உற்பத்தித் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது

Posted On: 01 JUL 2020 2:17PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரகத்தின், தலைமையகம் (DGGI, Hqrs) உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் இயக்கி வரும் பதிவு செய்யப்படாத பான் மசாலா / குட்கா தொழிற்சாலையைக் கண்டறிந்தது.

இதனையடுத்து பதிவு செய்யப்படாத தொழிற்சாலையின் இருப்பு வைக்கும் இடங்கள் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட முக்கிய நபரின் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25.06.2020 அன்று சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது, ​​வரி  செலுத்தாமல் பான் மசாலா / குட்கா வழங்குவது தொடர்பான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், நாற்பது கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. குட்கா உற்பத்தி செய்தல், பதுக்கி வைத்தல், விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவை டெல்லி அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் தரவுகளின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத தொழிற்சாலை ஊரடங்கு காலகட்டத்தில் கூட செயல்பாட்டை மேற்கொண்டுள்ளது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்படாத பான் மசாலா / குட்கா தொழிற்சாலையின் முக்கிய நபர் CGST சட்டம், 2017இன் விதிகளின் கீழ் 27.06.2020 அன்று கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.



(Release ID: 1635642) Visitor Counter : 150