நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நவம்பர் மாதம் வரை நீடிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் உணவு தானியங்கள் அரிசி கோதுமை

Posted On: 30 JUN 2020 7:32PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகையில், பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் நவம்பர் 2020 இறுதி வரை நீடிக்கப்படும் என்று அறிவித்தார். PMGKAY என்ற இந்தத் திட்டம் ஜூலை முதல் நவம்பர் 2020 வரை நீடிக்கப்படுகிறது. இந்த ஐந்து மாத காலத்தில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 5 கிலோ இலவச கோதுமை அல்லது அரிசி; ஒரு கிலோ கொண்டைக்கடலை மாதம் ஒன்றுக்கு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை நீடிப்பதற்காக அரசு 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடும். ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பதைக் கொண்டு வருவதை நோக்கி நாடு நகர்ந்து கொண்டுள்ளது என்பதை வலியுறுத்திய பிரதமர் வேலை தேடி வெளி ஊர்களுக்கு செல்லும் ஏழை மக்களுக்கு, இது மிகவும் பயனளிக்கும் என்றார்.

PMGKAY என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஏப்ரல்-ஜூன் காலத்தில் மொத்தம் 116 .34 எல் எம் டி உணவு தானியங்கள் பல்வேறு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்து எடுத்து வரப்பட்டன. பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்திற்கு 5.8 7 எல் எம் டி தேவை என்று மதிப்பிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 5,000 கோடி ரூபாய் செலவினம் 100 சதவிகித நிதி சுமையையும் இந்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானிய வினியோகம் (சுயசார்பு இந்தியா தொகுப்பு)

சுயசார்பு இந்தியா தொகுப்பின் கீழ் மாநில ரேஷன் அட்டைகள் தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராத, தேவையுள்ள மக்கள் சுமார் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன்  உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும், ஒவ்வொருவருக்கும் 5 கிலோ உணவு தானியம் என்ற வகையில் வழங்கப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 6.39 லட்சம் மெட்ரிக் டன்  உணவு தானியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 106141 மெட்ரிக் டன்  உணவு தானியங்களை இருபத்தோரு லட்சம் பயனாளிகளுக்கு மே மாதமும், 91.29 லட்சம் பயனாளிகளுக்கு ஜூன் மாதமும் வழங்கின. 39 ஆயிரம் மெட்ரிக் டன்  பருப்பு வகைகள் 1.96 கோடி புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள்; 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள்; தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம், மாநில திட்டங்களின் கீழ் வராத, தேவை உள்ள மக்கள் ஆகியோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு மே மாதத்திற்கும், ஜூன் மாதத்திற்கும் இலவசமாக வழங்கப்பட்டது. மாநிலங்களின் தேவைக்கேற்ப பருப்பு வகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன சுமார் 33998 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 32291 மெட்ரிக் டன் பருப்பு வகையை எடுத்துச் சென்றுள்ளன. 7263 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. உணவுதானியங்கள் வழங்குவதால் ஏற்படும் சுமார் 3109 கோடி ரூபாய் நிதிச்சுமையின் 100 சதவீதத்தையும், பருப்புகள் வழங்குவதால் ஏற்படும் 280 கோடி ரூபாய் நிதிச்சுமையின் 100 சதவீதத்தையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.

 

உணவு தானிய கொள்முதல்

29 6 2020 படி மொத்தம் 388.81 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை (ஆர் எம் எஸ் 2020 -21) ; 746..05 லட்சம் மெட்ரிக் டன் அரிசி (கே எம் எஸ்) 2019- 20 கொள்முதல் செய்யப்பட்டன.

திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டம் (OMSS)

OMSS திட்டத்தின் கீழ் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 22 ரூபாய்; கோதுமை கிலோ ஒன்றுக்கு 21 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக்கழகம், பொதுமுடக்கக் காலத்தின் போது 5.7 3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை , 10.12 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஆகியவற்றை விற்பனை செய்துள்ளது

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை

1 ஜூன் 2020 வரையிலான காலத்தில் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது



(Release ID: 1635594) Visitor Counter : 302