மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மத்திய மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு செய்திமடலின் முதல் பதிப்பான “மத்ஸ்ய சம்பதா” வை வெளியிட்டார்.

Posted On: 30 JUN 2020 5:20PM by PIB Chennai

மத்திய மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் இன்று மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு செய்திமடலின் முதல் பதிப்பான “மத்ஸ்ய சம்பதா” வை வெளியிட்டார், இது இந்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மற்றும் பிரதான் மந்திரி மத்ய சம்பத யோஜனாவின் (PMMSY) செயல்பாட்டு வழிகாட்டுதல்களால் வெளியிடப்பட்டது. இதில் இந்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பிரதாப் சந்திர சாரங்கி, மீன்வளத்துறைச் செயலாளர் டாக்டர்.ராஜீவ் ரஞ்சன் மற்றும் மீன்வளத் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0011EZ5.jpg

“MATSYA SAMPADA” என்ற செய்தி மடல், மீன்வளத் துறையின் முக்கிய முயற்சிகளின் விளைவாகும். இதன் வாயிலாக குறிப்பாக மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்கள் பல்வேறு தகவல் தொடர்பு மூலம் அணுகவும், மீன்வள மற்றும் மீன்வளர்ப்புத் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் பயிற்சி அளிக்கவும் உதவும். இது 2020-21ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கி காலாண்டு அடிப்படையில் வெளியிடப்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு மீன்வள, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், இந்த செய்திமடல் தொடங்குவது சரியான நேரத்தில் தொடங்கப்பட்டதாகும் மேலும் இது மீன்வளத் துறையில் அரசாங்கத்தின் முன் முயற்சிகளையும் அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரால் செய்யப்படும் நல்ல பணிகள் உட்பட அனைத்தையும் கொண்டு சேர்ப்பதற்கும் மிகவும் அவசியமாகிறது. செய்திமடல் பயனாளர்களிடையே குறிப்பாக மீனவர்கள், மீன் பண்ணையாளர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் தகவல்களைப் பரப்புவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் ஒரு முக்கியமான ஊடகமாக செயல்படும். செய்திமடல் தகவல் தொடர்புக்கான அருமையான தளமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்ட திரு கிரிராஜ் சிங், PMMSY வை தொடங்குவது மீன்வள மற்றும் மீன் வளர்ப்பு பயணத்தின் மிக முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டார். மீன்வள வியாபாரத் சந்தையில் பல்வேறு தலையீடுகளைக் கொண்ட PMMSY மீன்வள மற்றும் மீன்வளத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி அதை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்திமடல் “MATSYA SAMPADA” என்பது PMMSY -இன் நோக்கத்தையும் முன்முயற்சிகளையும் பரப்புவதில் ஒரு சிறந்த கருவியாகவும் தளமாகவும் செயல்படும், இது எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான கூட்டு முயற்சியில் பொதுக்கருத்தை தெளிவுப்படுத்துகிறது. மீனவர்கள், மீன் பண்ணையாளர்கள் மற்றும் தொழில்முனைவோரால் மேற்கொள்ளப்பட்ட மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகள், சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் வெற்றிக் கதைகள் உட்பட பலவற்றை வெளிப்படுத்த இது உதவும்.

****************



(Release ID: 1635441) Visitor Counter : 543