மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் 59 மொபைல் செயலிகளுக்கு அரசு தடை
प्रविष्टि तिथि:
29 JUN 2020 8:47PM by PIB Chennai
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின் கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இந்த செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை தடை செய்யவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் பரிந்துரை செய்திருந்தது. சில செயலிகள், தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும், தனிநபர் உரிமைக்கும் இடையூறு விளைவிப்பதாக பல புகார்கள் மக்களிடமிருந்து வந்தன. இந்தப் புகார்களை பரிசீலனை செய்து 59 செயலிகளை மொபைல் போன்களிலும், இண்டர்நெட் வசதியுள்ள மொபைல் அல்லாத பிற உபகரணங்களிலும் அனுமதிப்பதில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது. விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1635206
*****
(रिलीज़ आईडी: 1635286)
आगंतुक पटल : 701