நிதி ஆணையம்
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் 15-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டம்
Posted On:
29 JUN 2020 6:09PM by PIB Chennai
திரு.என்.கே.சிங் தலைமையிலான நிதிக்குழு இன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, இணையமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் சூழலில், ஆன்லைன் வகுப்புகள், கல்வி கற்பிக்க இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட புதிய கற்பிக்கும் முறைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை பற்றி விவாதிப்பதற்காக இக்கூட்டம் அழைக்கப்பட்டது. கல்வித்துறையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதிக்குழுவிடம் திருத்தப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கும் அவசியம் பற்றி, நிதிக்குழு ஏற்கனவே, பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித்துறை ஆகியவற்றுடன் விரிவான விவாதம் நடத்தியுள்ளது.
குறிப்பாக கோவிட்-19 காலத்தில், கல்வி பற்றிய பரிந்துரைகளை 2020-21 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் அளிப்பது தொடர்பாக, விவாதிக்கும் நோக்கத்துடன் நிதிக்குழு இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்காக, பின்வரும் விஷயங்களில், நிதிக்குழுவுக்குத் தெளிவு தேவைப்படுகிறது;
- வரைவு தேசியக் கல்விக் கொள்கையின் கீழ், தொடக்கக் கல்விக்கு முந்தைய வகுப்புகள் பற்றிய அளவிடக் கூடிய முடிவுகள் மற்றும் தலையீடுகள், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான கால வரையறை.
- மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக குழு அளித்துள்ள 7 குறியீடுகளைக் கண்காணிப்பது.
எப்சி- 15 விருது காலத்துக்கான கல்வித் திறனைக் கண்பாணிப்பதற்கான தர அளவீடுகள்
வரிசை எண்.
|
பொருள்
|
தரம் (%)
|
1
|
3-ஆம் வகுப்பில் சராசரி மொழி மதிப்பெண்- அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள்
|
10
|
2
|
3-ஆம் வகுப்பில் சராசரி கணக்கு மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள்
|
10
|
3
|
5-ஆம் வகுப்பில் சராசரி மொழி மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள்
|
10
|
4
|
5-ஆம் வகுப்பில் சராசரி கணக்கு மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள்
|
10
|
5
|
8-ஆம் வகுப்பில் சராசரி மொழி மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள்
|
10
|
6
|
8-ஆம் வகுப்பில் சராசரி கணக்கு மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள்
|
10
|
7
|
உயர் தொடக்கம் முதல் இடைநிலைக் கல்வி வரை, ஆடவர் மற்றும் மகளிர் இடையிலான மாறுதல் வேறுபாடு
|
40
|
- கல்வியின் இந்த 7 சுட்டுப்பொருள்கள் பற்றி மாநில வாரியாக இலக்குகளை அமைச்சகம் தயாரித்துள்ளது. 2021-22 முதல் மாநிலங்களுக்கு ஊக்குவிப்பு வழங்க அமைச்சகம் ஏதாவது முன்னேற்பாடு நடவடிக்கைகளை தயாரித்துள்ளதா? எனக்காணுதல்.
கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புக்கு எதிராகப் போராட அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 20 லட்சம் கோடி நிதிச் சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்வி தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை குழு கருத்தில் கொண்டுள்ளது;
- கோவிட் காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த ஆன்லைன் கல்வி முறைகள்
- இணையதள வசதி இல்லாதவர்களுக்கு கல்வி சென்றடைய சுவயம் பிரபா டிடிஎச் சேனல்களின் ஆதரவு. பள்ளிக்கல்வித் துறைக்கென ஏற்கனவே 3 சேனல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது, மேலும் 12 சேனல்கள் சேர்க்கப்படும்.
- நிபுணர்கள் வீடுகளில் இருந்தவாறு ஸ்கைப் வழியாக. இந்தச் சேனல்களில் நேரடியாகக் கலந்துரையாடும் அமர்வுகளை ஒளிபரப்புவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
- மேலும், இந்தக் கல்வி அலைவரிசைகள் அதிக அளவில் சென்று சேரும் வகையில், டாடா ஸ்கை, ஏர்டெல் போன்ற தனியார் டிடிஎச் இயக்குபவர்களுடன் ஒப்பந்தம்.
- கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை சுவயம் பிரபா சேனல்களில் ஒளிபரப்ப, இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஒருங்கிணைப்பு ( தினசரி 4 மணி நேரம்)
- மார்ச் 24 முதல் இன்று வரை திக்ஷா தளத்தை 61 கோடி பேர் பார்த்துள்ளனர்.
- இ-பாடசாலா தளத்தில் 200 புதிய பாடப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பங்குடன் கல்வி
- பிஎம் இவித்யா- உடனடியாகத் தொடங்கப்படவுள்ள டிஜிடல்/ஆன்லைன் கல்விக்கான பன்முறை அணுக்க நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ள அம்சங்கள்;
-
- மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பள்ளிக்கல்விக்கான திக்ஷா; அனைத்து வகுப்புகளுக்கான இ-உள்ளடக்கம், கியூஆர் கோட் வலுப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் ( ஒரு நாடு, ஒரு டிஜிடல் தளம்)
- 1 முதல் 12 வகுப்புகளுக்கான தலா ஒரு டிவி சேனல் ஒதுக்கீடு ( ஒரு வகுப்பு, ஒரு சேனல்)
- வானொலி, சமுதாய வானொலிகளை அதிகமாகப் பயன்படுத்துதல்
- பார்வையற்றோர், செவித்திறன் அற்றவர்களுக்கான சிறப்பு இ-உள்ளடக்கம்
- 2020 மே 30-ம் தேதி வாக்கில், ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க 100 முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி
-
- மனோதர்பன்- மனோபலம், உணர்வு ரீதியில் நலம் பெறுவதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்களுக்கு உள ரீதியான ஆதரவு வழங்குவதற்கான முன்முயற்சி உடனடியாக துவக்கம்
3. பள்ளி, சிறு குழந்தை பருவம் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய தேசியப் பாடத்திட்டம் மற்றும் கல்வி வரையறை தொடங்கப்படும்; உலகம் மற்றும் 21-ஆம் நூற்றாண்டுத் திறன் தேவைகள் ஒருங்கிணைப்பு.
4. 2025-ஆம் ஆண்டுக்குள், ஒவ்வொரு குழந்தையும் கற்றுக்கொள்ளும் மட்டத்தை அடைவது மற்றும் 5 தரத்தில் பெறுவது ஆகியவற்றை உறுதி செய்வதற்கான தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இயக்கம் 2020 டிசம்பரில் தொடங்கப்படும்.
பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலர் திருமிகு. அனிதா கார்வால் அளித்த விளக்கப்படத்தில், கோவிட்-19 தொற்று முன்னெப்போதும் கண்டிராத சுகாதார நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. பள்ளிக்கல்வியையும் அது பாதித்துள்ளது எடுத்துக்காட்டப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், கற்றலைத் தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் பின்வரும் முயற்சிகளை துறை மேற்கொண்டுள்ளது;
- பிஎம் இ-வித்யா- பள்ளிக்கல்வி
- சுவயம் பிரபா டிவி அலைவரிசைகள் மூலம் டிஜிடல் கற்றல்
- தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம்
- டிஜிடல் புத்தகங்கள் மற்றும் இ-உள்ளடக்கத்துக்கான இ-பாடசாலா
- சுவயம் தளம்
- ஆபரேசன் டிஜிடல் வாரியம்
- தேசிய திறந்த நிலைக் கல்வியியல் வளங்கள் கருவூலம்
- நீண்டகாலக் கற்றல் உத்தி பற்றிய கற்பனை மற்றும் வடிவ மின்ணணுக் கல்வி
- டிஜிட்டல் கல்வி சென்று சேராத அனைத்து உயர் தொடக்கப்பள்ளி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில் ஐசிடி வசதிகளை அளித்தல்
- சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு ஊக்குவிப்பு
- மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ள பிஜிஐ, திறமையை மதிப்பிடும் கருவியாகப் பயன்படுத்தப்படும்.
- பிஜிஐ மதிப்பிடும் முடிவுகள், கற்றல் முடிவுகள் அளவீடு ( 6 குறியீடுகள்), இடைநிலைக் கல்விக்கு பெண்கள் மாறும் மட்டம் ( ஒரு குறியீடு) பயன்படுத்தப்படும்.
- அதிக தரக்குறியீடு பெறும் மாநிலம் மற்றும் அதிக சதவீத முன்னேற்றம் காட்டும் 3 மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அடிப்படையிலான மானியங்கள் ஒதுக்கப்படலாம்.
- கிரேடு வழங்கும் நோக்கத்துக்காக, பள்ளி மட்டத்தில் கற்றல் முடிவுகள் மூன்றாவது தரப்பால் மதிப்பிடப்படும். மதிப்பீட்டு விதிமுறைகளை வகுப்பதில் நிதிஆயோக்கை துறை ஈடுபடுத்தும்.
பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைக்கான மொத்தக் கணிப்புகள் வருமாறு;
வரிசை எண்.
|
பொருளடக்கம்
|
தேவையான நிதி
|
1
|
2021-22 முதல் 2025-26 வரை, கல்விக்கான உரிமை (RTE) தலையீடுகளின் படி ஐந்து ஆண்டுகளுக்கான திருத்தப்பட்டக் கணிப்பு
|
4,62,827.39
|
2
|
என்இபி 2020 –ஐ செயல்படுத்துவதற்கான கூடுதல் நிதி
|
1,13,684.51
|
3
|
குறிப்பிட்ட பிரிவு மானியங்கள் (பிஜிஐ பிரிவு)
|
5,000.00
|
4
|
3.10 லட்சம் அரசு பள்ளிகளில் ஐசிடி வசதிகளை அளித்தல்
|
55,840.00
|
மொத்தம்
|
மொத்தம் தேவையான நிதி
|
6,37,351.90
|
உயர் கல்வித்துறைச் செயலர் திரு அமித்காரேயும் குழுவின் முன்பாக விளக்கமளித்தார். மாறிவரும் மக்கள்தொகை, உயர்கல்வியில் உலக ஒப்பீடுகளை மேற்கொள்ள இந்தியாவின் தயார்நிலை ஆகியவை பற்றி அவர் எடுத்துரைத்தார். 2035-ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீதத்தை எட்டும் வகையில் ஜிஇஆர்-ஐ அதிகரிப்பது உள்ளிட்ட சவால்கள் மற்றும் சீர்திருத்தங்களை அவர் விரிவாகத் தெரிவித்தார். இதனை எட்ட தர அங்கீகாரம், ஆன்லைன், டிஜிட்டல், கலவை முறை கல்வி உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த கல்வி ஆகியவற்றின் மூலம் தன்னாட்சி தேவை என்று அவர் தெரிவித்தார். ஆன்லைன் கல்விக்கான ஏராளமான ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள துறை உத்தேசித்துள்ளது.
2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்தை விருதுக்கான கணிப்பாக நிதிக்குழுவுக்குத் துறை அளித்துள்ளது.
உயர் கல்வித்துறைக்கு தேவைப்படும் நிதித்தேவை குறித்த விரிவான கணிப்புகள் நிதிக்குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளன. துறை கல்வி தர மேம்பாடு மற்றும் உள்ளார்ந்த திட்டத்துக்கு ( இகியூயுஐபி), 5 ஆண்டுகளுக்கு ரூ. 1,32,559.9 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் படிப்புகள் , திட்டங்களுக்காக 5 ஆண்டுகளுக்கு, இத்துறை மேலும் ரூ.2306.4 கோடியாக தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. மடிக்கணினி, டேப்லட்டுகள், கைபேசிகள், தொலைக்காட்சி பெட்டிகள் போன்றவற்றை உருவாக்குவதற்கு 5 ஆண்டு காலத்துக்கு ரூ.60,900 கோடி தேவைப்படுகிறது. எக்கியூப் திட்டத்தை அமல்படுத்திய பின்னர் ( 2020-21 முதல் 2025-26 வரை) உயர் கல்வித்துறைக்கு அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு மொத்தம் ரூ. 4,00,576.25 கோடி தேவைப்படும் எனத் தெரிவித்ததுள்ளது.
அமைச்சகம் தெரிவித்த இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் நிதிக்குழு விரிவான விவாதம் நடத்தியது. அரசுக்கு இறுதி பரிந்துரை வழங்கும்போது , இவை ஒவ்வொரு பிரிவு குறித்தும் கவனிக்கப்படும் என்று நிதிக்குழு உறுதி அளித்துள்ளது.
*****
(Release ID: 1635229)
Visitor Counter : 357