ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
தேசிய உர நிறுவனத்தின் நடமாடும் பரிசோதனை ஆய்வுக் கூடம்.
Posted On:
29 JUN 2020 5:10PM by PIB Chennai
தகுந்த உரங்களைப் பயன்படுத்துவதற்காக நாட்டில் மண் பரிசோதனை வசதியை அதிகரிக்கும் விதத்தில், விவசாயிகளுக்கு அவர்களது இல்லங்களிலேயே மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்து கொடுப்பதற்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 5 ஆய்வுக்கூடங்களை தேசிய உர நிறுவனம் (National Fertilizers Limited - NFL) அறிமுகப்படுத்தியுள்ளது. நோய்டாவில் உள்ள NFL நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து, நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை இன்று இந்த நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குநர் திரு.வி.என்.தத்தா, இயக்குநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நவீன மண் பரிசோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கூடங்கள், பெரிய அளவிலான மற்றும் சிறு அளவிலான ஊட்டச்சத்துப் பகுப்பாய்வு செய்யப் பயன்படுத்தப்படும். இது தவிர இந்த நடமாடும் ஆய்வுக்கூடங்களில் விவசாயம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவூட்டுவதற்காக ஒலி-ஒளி நிகழ்ச்சிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் தவிர நாட்டின் பல்வேறு இடங்களிலும் நிலையான 6 மண் பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் மூலமாக இந்நிறுவனம் விவசாயப் பெருமக்களுக்கு சேவை செய்து வருகிறது. 2019-20ஆம் ஆண்டில் இந்த ஆய்வுக்கூடங்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் மாதிரிகளை இலவசமாகப் பரிசோதனை செய்துள்ளன.
*****
.
(Release ID: 1635184)
Visitor Counter : 236