உள்துறை அமைச்சகம்

“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், ஒட்டுமொத்த தேசமும் பிரதமருக்கு பின்னால் அணிவகுக்கிறது” - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 28 JUN 2020 9:57PM by PIB Chennai

"மோடி அரசு கொவிட் நிலைமையை மிகவும் சரியான முறையில் கையாளுகிறது, தில்லியின் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தில்லியில் சமூகத் தொற்று ஏற்படவில்லை என்றும் அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

தில்லியின் துணை முதல்வர் திரு மணீஷ் சிசோடியா, ஜூன் 2-வது வாரத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தில்லியில் நிலைமை மோசமாக இருக்கிறது என்றும், ஜூலை மாத இறுதியில், தில்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.5 லட்சமாக உயரும் என்று கூறியது தில்லிவாசிகளுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்த திரு அமித் ஷா, கொவிட் நிலைமையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தில்லி அரசின் பொறுப்பு என்றும் ஆனால் துணை முதல்வர் வெளியிட்ட அறிக்கையை அடுத்து, மத்திய அரசு செயலில் இறங்கி, நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.   ஜூன் 14-ம் தேதியன்று, இதற்காக ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றை கூட்டியதாகவும், அதிக அளவில் பரிசோதனைகளை  செய்வதால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதாகவும்,  தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள், அதன் மூலம் தொற்று பரவல் தடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

          தில்லியில், ஜூன் 14-ம் தேதி 9,937 ஆக இருந்த படுக்கைகளின் எண்ணிக்கை இன்று 30,000 மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய திரு அமித் ஷா, தொற்று பரவல் மண்டலங்களில் வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இது ஜூன் 30 அன்று நிறைவடையும் என்றும் கூறினார்.

----



(Release ID: 1635073) Visitor Counter : 168